Connect with us

job news

உதவி மேலாளர் பதவிக்கு அழைக்கிறது ‘SEBI’..உடனே அப்ளை பண்ணுங்க.!!

Published

on

(SEBI) செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா அதிகாரி கிரேடு ஏ உதவி மேலாளர் (Assistant Manager) பதவிக்கு வேலைக்கு ஆட்கள் தேவை என அறிவித்துள்ளது. SEBI என்பது பரவலாக அறியப்படும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் இந்தியாவில் பங்குச் சந்தைகள், நிதிச் சந்தைகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் கட்டுப்பாட்டு அமைப்பு.இந்த அமைப்பானது தற்போது உதவி மேலாளர் (Assistant Manager) பதவிக்கு ஆட்கள் வேண்டும் என அறிவித்துள்ளது. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 25

UR – 11

OBC – 7

SC – 3

ST – 2

EWS – 2

கல்வி தகுதி

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் நிறுவனத்தில் சட்டத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டும் தான் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.

தேர்வு செய்யும் முறை

தேர்வு முறை மூன்று-நிலை செயல்முறையாக இருக்கும், அதாவது கட்டம் I (ஒவ்வொன்றும் 100 மதிப்பெண்கள் கொண்ட இரண்டு தாள்களைக் கொண்ட ஆன்-லைன் ஸ்கிரீனிங் தேர்வு), இரண்டாம் கட்டம் (தலா 100 மதிப்பெண்கள் கொண்ட இரண்டு தாள்களைக் கொண்ட ஆன்-லைன் தேர்வு) மற்றும் கட்டம் III (நேர்காணல் ) எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்

ஏ பிரிவில் உள்ள அதிகாரிகளின் ஊதியம் ரூ. 44500-2500(4)-54500-2850(7)-74450-EB-2850(4)-85850-3300(1)-89150 (17 ஆண்டுகள்) எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மேலும் தகவலை கீழே உள்ள pdf-க்குள் சென்று பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

விண்ணப்பக் கட்டணம்

  • முன்பதிவு செய்யப்படாத/OBC/EWS : ரூ. 1,000 + 18% ஜிஎஸ்டி எடுக்கப்படும்
  • SC/ ST/ PwBD ஆகிய பிரிவுக்கு ; ரூ 100 + 18% ஜிஎஸ்டி எனவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது..? 

இந்த வேலையில் சேர ஆர்வமும், விருப்பமும் உங்களுக்கு இருந்தால் விண்ணப்பதாரர்கள் www.sebi.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஜூன் 22, 2023 முதல் ஜூலை வரை ஆன்-லைனில் விண்ணப்பித்துக்கொள்ளலாம். இணைதளத்திற்குள் சென்று விண்ணப்பத்தை பதிவு செய்து கட்டணத்தை செலுத்த வேண்டும். மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள இந்த PDF-ஐ க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *