Connect with us

job news

சென்னை மக்களுக்கு அரிய வாய்ப்பு..! என்ஐஈபிஎம்டி நிறுவனத்தில் ஒருங்கிணைப்பாளர் பணி..! மிஸ் பண்ணிடாதீங்க..

Published

on

NIEPMD

என்ஐஈபிஎம்டி என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுகள் உள்ள நபர்களுக்கு சேவைகளை வழங்கும் ஒரு இந்திய அரசு நிறுவனம் ஆகும். ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுகள் உள்ள நபர்களின் அதிகாரமளிப்பதற்கான தேசிய நிறுவனத்தில் (National Institute for Empowerment of Persons with Multiple Disabilities – NIEPMD) ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பணியை நிரப்புவதற்கான Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலிப்பணியிடம்:

என்ஐஈபிஎம்டி நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள ஒருங்கிணைப்பாளர் பணியை நிரப்ப உள்ளது. இதற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிப்பதற்கு முன், இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படிக்க வேண்டும்.

NIEPMD Recruitment

NIEPMD Recruitment

விண்ணப்பதாரர் வயது: 

ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிப்பவரின் அதிகபட்ச வயது அரசாங்க விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் தகுதி: 

  • கணினி பற்றிய அடிப்படை அறிவுடன் ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • 30 wpm வேகத்துடன் தமிழ் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

  • தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர் niepmd.tn.nic.in அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று Notification அறிவிப்பை முழுவதுமாக படிக்கச் வேண்டும்.
  • பிறகு அறிவிப்பில் இருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன்,சான்றிதழ்கள் அசல் மற்றும் ஒரு செட் சுய சான்றளிக்கப்பட்ட உண்மை நகல், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், ஆதார் அல்லது ஏதேனும் செல்லுபடியாகும் அடையாளச் சான்று ஆகியவற்றுடன் நேர்காணலுக்கு கொண்டு வர வேண்டும்.
  • நேர்காணல் முகவரி : NIEPMD, East Coast Road, Muttukadu, Chennai – 603 112
  • நேர்காணல் தேதி மற்றும் நேரம் : 30.06.2023 (Friday), 11.00 AM

கடைசி தேதி மற்றும் சம்பள விவரம்:

ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணபிப்பவர் நேர்காணல் தேதியைத் தாண்டி விண்ணப்பித்தால் அவர்களது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இதற்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.30,000 சம்பளமாக வழங்கப்படும்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *