job news
PGIMER நிறுவனத்தில் வேலை…பல்வேறு பதவிகள் இருக்கு..விவரத்தை படித்து உடனே விண்ணப்பீங்க.!!
PGIMER என்பது முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம். இது இந்தியாவின் சண்டிகரில் உள்ள ஒரு பொது மருத்துவ பல்கலைக்கழகம் ஆகும். இந்நிலையில், PGIMER சமீபத்தில் சண்டிகர் 2ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு ஒன்றை அறிவித்தது. அதன்படி, பல்வேறு பதவிகளில் மொத்தம் 206 காலியிடங்கள் உள்ளன. சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நீங்கள் வேலை செய்ய விரும்பினால் கீழே வரும் விவரங்களை படித்துக்கொண்டு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
பதவியின் பெயர் மற்றும் சம்பள விவரங்கள்
வயது வரம்பு
- விண்ணப்பதாரரின் வயது 18 மற்றும் 50 க்கு குறைவாக இருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்
- இந்த விண்ணப்பப் படிவத்திற்கு பொது/OBC/ EWS செலுத்த 1500 ரூ/- மற்றும் SC/ST பிரிவினர் அந்த படிவத்திற்கு 800 ரூ/- செலுத்த வேண்டும்.
தேர்வு செயல்முறை
- இந்த பணியில் சேர விரும்ப விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு CBT தேர்வு இருக்கும். அதன் பிறகு, ஆவண சரிபார்ப்பு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் இருக்கும் எனவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்த பணியில் சேர விருப்பமும், தகுதியும் உங்களுக்கு இருந்தால் www.pgimer.edu.in.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும். பிறகு விண்ணப்பிக்கவும் ஆன்லைன் லிங்கை கிளிக் செய்யவும். அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தில் உங்களின் முக்கியமான தகவல்களை நிரப்பவும்.
பிறகு, அதில் கேட்கும் தேவையான உங்களுடைய ஆவணத்தை பதிவேற்றவும். நீங்கள் பதிவு செய்துள்ள அனைத்தும் சரியானதா..? என்று ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்த பிறகு விண்ணப்பத்திற்கான கட்டணம் செலுத்தவும். அனைத்தும் முடிந்த பிறகு அதனை ஒரு பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். எனவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆட்சேர்ப்பின் விவரங்கள்
இந்த பணியில் சேர ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்கிவிட்டது. வரும் ஜூலை 13, 2023 அன்று கடைசித் தேதி. எனவே உங்களுக்கு இந்த பணியில் சேர விருப்பம் இருந்தால் அந்த தேதி அல்லது அதற்கு முன்னதாகவே விண்ணப்பித்துக்கொள்ளுங்கள். அதற்கு முன்னதாக உங்கள் விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
மேலும், விண்ணப்பம் செய்தவர்களுக்கு தேர்வு செயல்முறை மற்றும் தகுதி போன்ற அனைத்துத் தகவல்களும் www.pgimer.edu இணையத்தளத்தில் தெரிவிக்கப்படும். இந்த பணியில் சேரவேண்டும் என விருப்பம் உள்ளவர்கள் M.SC பட்டம்/ B.Tech/ B.SC/MBA/ பட்டதாரி/ மெட்ரிக்/ மற்றும் பதவிகளின் படி ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். சில பதவிகளுக்கு, விண்ணப்பதாரர்கள் அனுபவம் சான்றிதழ் வேண்டும் என்பது குறிப்பிடதக்கது.