Connect with us

automobile

எக்ஸ்டர் முதல் செல்டோஸ் பேஸ்லிஃப்ட் வரை.. விரைவில் இந்தியா வரும் புதிய கார் மாடல்கள்!

Published

on

Upcoming-Cars-Featured-img

உலகளவில் முன்னணி ஆட்டோமொபைல் சந்தையாக இந்தியா உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் இந்திய சந்தையில் களமிறங்கி தங்களது கார் மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றன. மேலும் பல நிறுவனங்கள் களமிறங்குவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றன.

இதுதவிர நீண்ட காலமாக இந்திய சந்தையில் கொடிக்கட்டி பறக்கும் உள்நாட்டு நிறுவனங்கள், தன் பங்கிற்கு தொடர்ச்சியாக புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன. அந்த வகையில், வரும் ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் பல்வேறு புதிய கார் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. வரும் மாதங்களில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் புதிய கார் மாடல்கள் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஹூண்டாய் எக்ஸ்டர் :

Hyundai-Exter-1

Hyundai-Exter-1

இந்தியாவில் புதிய எக்ஸ்டர் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும். ஜூலை 10-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஹூண்டாய் எக்ஸ்டர், கிரான்ட் i10 நியோஸ் மாடல் உருவாக்கப்பட்ட பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 1.2 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு MT அல்லது AMT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. மேலும் CNG வேரியண்ட் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மாருதி சுசுகி இன்விக்டோ :

மாருதியின் நெக்சா பிரான்டிங்கில் விற்பனை செய்யப்பட இருக்கும் மாருதி சுசுகி இன்விக்டோ மாடல் முன்பதிவும் ஏற்கனவே துவங்கி விட்டது. புதிய மாருதி சுசுகி இன்விக்டோ மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் ஆகும். இது மாருதி சுசுகி நிறுவனத்தின் விலை உயர்ந்த எம்பிவி மாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Maruti-Suzuki-Invicto

Maruti-Suzuki-Invicto

புதிய மாருதி சுசுகி இன்விக்டோ மாடல் 7 மற்றும் 8 பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கும் என்று தெரிகிறது. ஹைப்ரிட் வடிவில் மட்டும் கிடைக்கும் இன்விக்டோ மாடலில் 2.0 லிட்டர் ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த கார் லிட்டருக்கு அதிகபட்சம் 21 கிலோமீட்டர்கள் மைலேஜ் வழங்கும் என்று தெரிகிறது.

மஹிந்திரா தார் 5-டோர் :

thar

thar

மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஐந்து கதவுகள் கொண்ட தார் மாடல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த கார் மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் உருவாக்கப்பட்ட லேடர் ஃபிரேம் சேசிஸ்-இல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் 2.2 லிட்டர் டீசல், 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

கியா செல்டோஸ் பேஸ்லிஃப்ட் :

புதிய கியா செல்டோஸ் பேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் ஜூலை 4-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் இன்டீரியர் மற்றும் வெளிப்புறங்களில் அதிக மாற்றங்கள் செய்யப்படும் என்று தெரிகிறது. முன்புறம் ரிடிசைன் செய்யப்பட்ட கிரில் மற்றும் கூர்மையான ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில் லேம்ப்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது.

2024-Kia-Seltos-Facelift

2024-Kia-Seltos-Facelift

கியா செல்டோஸ் பேஸ்லிஃப்ட் மாடலில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த என்ஜின் 160 பிஎஸ் பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இதே என்ஜின் வெர்னா மற்றும் அல்கசார் மாடல்களிலும் வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

டாடா நெக்சான் பேஸ்லிஃப்ட் :

Tata-Nexon

Tata-Nexon

பேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட டாடா நெக்சான் மாடல் இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் கார் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது. இதன் விற்பனை ஆகஸ்ட் மாத வாக்கில் துவங்கும் என்று தெரிகிறது. புதிய நெக்சான் மாடலின் வெளிப்புற டிசைன் கர்வ் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என்று இன்டீரியர் முழுமையாக மாற்றப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. இந்த மாடலில் 115 ஹெச்பி திறன் வழங்கும் 1.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது.

google news