latest news
ஜியோசாவன் ப்ரோ சந்தா, 2 ஜிபி டேட்டா வழங்கும் ஜியோ ரிசார்ஜ் திட்டங்கள்!
இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ 2 ஜிபி டேட்டா வழங்கும் இரண்டு புதிய ரிசார்ஜ் திட்டங்களை அறிவித்து இருக்கிறது. தினமும் 2 ஜிபி டேட்டா மட்டுமின்றி இரு திட்டங்களிலும் ஏராளமான பலன்கள் வழங்கப்படுகின்றன. இவற்றின் விலை ரூ. 789 மற்றும் ரூ. 589 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.
இந்த பிரீபெயிட் ரிசார்ஜ் திட்டங்களில் ஜியோசாவன் ப்ரோ சந்தா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். மற்றும் பிரபல ஜியோ செயலிகளான ஜியோ டிவி, ஜியோசினிமா, ஜியோகிளவுட் மற்றும் ஜியோசெக்யுரிட்டி உள்ளிட்டவைகளுக்கு சந்தா வழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ ரூ. 789 திட்டம் :
ஜியோ ரூ. 789 பிரீபெயிட் ரிசார்ஜ் திட்டம் 84 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்குகிறது. இதில் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் ஜியோசாவன் ப்ரோ சந்தா வழங்கப்படுகிறது. இதில் பயனர்களுக்கு வரம்பற்ற மியூசிக் ஸ்டிரீமிங் வசதி, டவுன்லோட் ஆப்ஷன் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது.
கூடுதலாக அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோ டிவி சந்தா, ஜியோசினிமா செயலி மூலம் ஏராளமான திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கும் வசதி வழங்கப்படுகிறது. ஜியோகிளவுட் செயலியில் ஃபைல்களை ஸ்டோர் மற்றும் சின்க் செய்ய முடியும். ஜியோசெக்யுரிட்டி மூலம் சாதனத்தை பாதுகாக்கும் வசதி வழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ ரூ. 589 திட்டம் :
குறுகிய கால வேலிடிட்டி போதும் என்போருக்கான திட்டம் ரூ. 589 ஆகும். ரிலையன்ஸ் ஜியோ ரூ. 589 திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். இதில் ரூ. 789 திட்டத்தில் உள்ளதை போன்ற பலன்களே வழங்கப்படுகின்றன. இந்த பிரீபெயிட் ரிசார்ஜ் திட்டத்திலும் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மற்றும் தினமும் 100 எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் வழங்கப்படுகின்றன.
இத்துடன் ஜியோசாவன் ப்ரோ சந்தா வழங்கப்படுகிறது. ஜியோ ரூ. 589 ரிசார்ஜ் திட்டத்தில் பயனர்கள் ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்ட பலன்களை பெற முடியும். இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுக்க அதிவேக இணைய வசதியை வழங்க ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்து இருக்கிறது.
ஜியோவின் இரண்டு பிரீபெயிட் ரிசார்ஜ் திட்டங்களையும், பயனர்கள் மைஜியோ செயலி, ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளம் அல்லது முன்னணி ரிசார்ஜ் தளங்களின் மூலம் ரிசார்ஜ் செய்து கொள்ள முடியும்.