latest news
30000க்குள் சிறந்த பேட்டரி தன்மையை கொண்ட மொபைல் போன்கள்..எதெல்லாம்னு தெரிஞ்சிகனுமா?..
2023ஆம் ஆண்டில் மீடியம் விலை போன்கள் பல வந்துள்ளன. 30000க்கும் கீழ் சாம்சங், போகோ, iQOO, ஒன்ப்ளஸ் என பல நிறுவனங்களின் மொபைல் போன்கள் உள்ளன. இவை அனைத்தும் பலவகை வசதிகளை கொண்டிருத்தாலும் சிறந்த பேட்டரித்தன்மையையும் கொண்டுள்ளன. இவ்வாறான போன்கள் எவை என பார்க்கலாம்.
Samsung Galaxy F54:
இந்த மொபைலானது 6000mAh பேட்டரி தன்மையை கொண்டுள்ளது. 2023ல் வந்த மொபைல் வகைகளில் இது ஒரு சிறந்த மொபைல். மேலும் இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 2 நாட்களுக்கு நீடித்து உழைக்கக்கூடியதாகும். இது 108 mp கேமராவையும், 120Hz AMOLED திரையையும் கொண்டுள்ளது. மேலும் இது 8ஜிபி RAM மற்றும் 256ஜிபி இண்டெர்னல் ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.29,999 ஆகும்.
iQOO Neo 7:
இதன் பேட்டரி 5000mAh மற்றும் இது 120w ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இதனை நாம் சார்ஜ் செய்யும் பொழுது 10 நிமிடங்களுக்குள் 50% சார்ஜ் ஆகி விடுமாம். அதிக மொபைல் உபயோகிப்பாளர்களுக்கு இது ஒரு சிறந்த சாய்ஸ். இதன் விலை ரூ.27,999 ஆகும்.
POCO F5:
5000mAh பேட்டரி அமைப்பினை கொண்ட இந்த மொபைலானது 67w ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியினை கொண்டது. மேலும் இதில் Snapdragon 7+Gen 2 ப்ராஸசரும் இருப்பதால் இதன் வேகம் சற்று அதிகமாகவே இருக்கும். இதனை ஒரு முறை சார்ஜ் செய்வதனால் நாம் ஒரு நாள் முழுவதும் மொபைலை உபயோகப்படுத்தலாம். இதன் விலை ரூ.29,999 ஆகும்.
OnePlus Nord 2T:
80w ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியினை கொண்ட இதன் பேட்டரி 4500mAh தன்மையை கொண்டது. மேலும் இது 6.43 இன்ச் திரையினையும் 50mp கேமராவையும் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.28,999 ஆகும்.
Realme 11 Pro+:
இந்த மொபைலானது 5000mAh பேட்டரி தன்மையையும் 100w ஃபாஸ்ட் சார்ஜிங் தன்மையையும் கொண்டுள்ளது. மேலும் இது 12ஜிபி RAM, 256ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது. இது 200mp பின்புற கேமராவை கொண்டுள்ளதால் இதன் கேமரா மிக துல்லியமாக படங்களை எடுக்கும். இதன் விலை ரூ.27,999 ஆகும்.