Connect with us

latest news

பயனர்களுக்கு 5ஜிபி இலவச டேட்டா வழங்கும் வோடபோன் ஐடியா – உடனே பெறுவது எப்படி?

Published

on

vodaphone

இந்திய டெலிகாம் சந்தையில் நிலவும் கடுமையான போட்டி காரணமாக வி (வோடபோன் ஐடியா) நிறுவனத்தின் பயனர்கள் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. மேலும் டெலிகாம் சந்தையில் வி நிறுவனத்தின் 5ஜி சேவைகளை வெளியீட்டு பணிகளும் தொட்ரந்து தாமதமாகிறது.

பயனர் எண்ணிக்கை குறைவதை நிறுத்தும் நோக்கில் வி நிறுவனம் புதிய சலுகைகளை அறிவித்து வருகிறது. சமீபத்தில் தான், தேர்வு செய்யப்பட்ட பிரீபெயிட் திட்டங்களை, பயனர்கள் வி செயலியின் மூலம் ரிசார்ஜ் செய்யும் போது எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி கூடுதல் டேட்டா வழங்கியது. தற்போது இதே திட்டம் மீண்டும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி பயனர்கள் வி செயலி மூலம் பிரீபெயிட் ரிசார்ஜ் செய்தால் அதிகபட்சம் 5ஜிபி வரை கூடுதல் டேட்டா பெற முடியும்.

vodaphone

vodaphone

“மஹா ரிசார்ஜ் திட்டம்” என்று அழைக்கப்படும் இந்த திட்டம் குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்பட இருக்கிறது. மேலும் பயனர்கள் ரூ. 299 அல்லது இதைவிட அதிக தொகைக்கு ரிசார்ஜ் செய்யும் போது கூடுதல் டேட்டாவை பெற்றுக் கொள்ள முடியும். இதற்கான வேலிடிட்டி மூன்று நாட்கள் ஆகும்.

வி கூடுதல் டேட்டா வழங்கும் ரிசார்ஜ் திட்டங்கள்:

புதிய திட்டம் குறித்து வி வெளியிட்டுள்ள அறிக்கையில், ரூ. 199 முதல் ரூ. 299 வரையிலான தொகைக்கு ரிசார்ஜ் செய்யும் போது மூன்று நாட்களுக்கு 2 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்படும். ரூ. 299 மற்றும் அதிக விலை கொண்ட பிரீபெயிட் திட்டங்களை தேர்வு செய்யும் போது 5 ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்கப்படும். இத்துடன் வி மூவிஸ், டிவி, வி மியூசிக் மற்றும் வி கேம்ஸ் உள்ளிட்டவைகளை கண்டுகளிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது. வி கேம்ஸ் செயலியில் ஆண்ட்ராய்டு மற்றும் ஹெச்டிஎம்எல் 5 சார்ந்து உருவாக்கப்பட்ட 1200-க்கும் அதிக மொபைல் கேம்கள் உள்ளன.

முன்னதாக வி நிறுவனம் அதிக டேட்டா மற்றும் பொழுதுபோக்கு ஆப்ஷன்களை எதிர்பார்க்கும் தனது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய பிரீபெயிட் திட்டங்களை அறிவித்தது. இந்த திட்டங்களின் விலை ரூ. 368 மற்றும் ரூ. 369 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இரண்டு திட்டங்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பலன்களை வழங்குகின்றன. அதன்படி இரு பிரீபெயிட் திட்டங்களிலும் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி அன்ற அடிப்படையில் மொத்தம் 60 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

vodaphone

vodaphone

30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இரு திட்டங்களிலும் தினசரி 100 எஸ்எம்எஸ், வி மூவிஸ் மற்றும் டிவி செயலிக்கான சந்தா வழங்கப்படுகிறது. இரு திட்டங்களை வித்தியாசப்படுத்துவது வாய்ஸ் காலிங் மற்றும் ஒடிடி பலன்கள் தான் எனலாம். ரூ. 368 திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சேவை மற்றும் சன் நெக்ஸ்ட் சேவைக்கான சந்தா வழங்கப்படுகிறது. ரூ. 369 திட்டத்தில் சோனிலிவ் சேவைக்கான சந்தா வழங்கப்படுகிறது.

இந்த திட்டங்கள் தவிர வி நிறுவனம் ரூ. 181 விலையில் மற்றொரு பிரீபெயிட் திட்டத்தை கடந்த மாதம் அறிவித்தது. இதில் தினமும் 1 ஜிபி டேட்டா 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. தினசரி டேட்டாவை விரைந்து பயன்படுத்துவோர் இந்த திட்டத்தின் மூலம் கூடுதல் டேட்டா பெற்றுக் கொள்ள முடியும். இது ஆட் ஆன் டேட்டா திட்டம் ஆகும்.

google news