Connect with us

automobile

இந்த ஆண்டு விற்பனையில், அந்த மாடல்கள் பட்டையை கிளப்பும் – மெர்சிடிஸ் பென்ஸ் நம்பிக்கை..!

Published

on

Mercedes-Benz-Used-Cars-Featured-

ஜெர்மன் நாட்டு ஆடம்பர கார் உற்பத்தியாளரான மெர்சிடிஸ் பென்ஸ், இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஒட்டுமொத்த விற்பனையில் 20 சதவீதம் யூனிட்கள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட மாடல்களாக இருக்கும் என்று அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது. கடந்த ஆண்டு மட்டும் மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிக பயன்படுத்தப்பட்ட யூனிட்களை விற்பனை செய்து இருப்பதாக அறிவித்து உள்ளது.

Mercedes-Benz-Used-Cars-1

Mercedes-Benz-Used-Cars-1

ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட வாகனங்களை வாங்குவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பயன்படுத்தப்பட்ட வாகனங்களை வைத்திருக்கும் காலம், முன்னதாக 30 முதல் 45 நாட்களாக இருந்து தற்போது பத்து நாட்களாக குறைந்து இருக்கிறது.

Mercedes-Benz-Used-Cars-2

Mercedes-Benz-Used-Cars-2

“எங்களின் ஒட்டுமொத்த விற்பனையில், இன்னமும் 18 முதல் 20 சதவீதம் பயன்படுத்தப்பட்ட வாகனங்களாக இருக்கும். கடந்த ஆண்டு நாங்கள் 16 ஆயிரம் கார்களை விற்பனை செய்து இருந்தால், அதில் 3 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள், கிட்டத்தட்ட 20 சதவீதம் பயன்படுத்தப்பட்ட மாடல்கள் ஆகும். இதே நிலை நீடிக்கும் பட்சத்தில், 20 சதவீதம் என்றே கூறலாம்,” என்று மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சந்தோஷ் ஐயர் தெரிவித்து இருக்கிறார்.

Mercedes-Benz-Used-Cars-4

Mercedes-Benz-Used-Cars-4

எனினும், பயன்படுத்திய கார்களின் விற்பனை 20 சதவீதத்தை கடந்த அதிகரிக்குமா என்பது சவால் நிறைந்த காரியம் ஆகும். “பயன்படுத்திய கார் மாடல்கள் விற்பனை புதிய கார் சந்தையை சார்ந்து தான் இயங்குகிறது. இன்றைய தேதியில், பயன்படுத்திய கார் கிடைப்பதில் இருக்கும் பெரிய சிக்கல், புதிய கார் வாங்குவதற்கான காத்திருப்பு காலம் மூன்றில் இருந்து அதிகபட்சமாக ஆறு மாதங்கள் வரை நீடிக்கிறது. இதன் காரணமாக பயனர்கள் பழைய கார்களை விற்காமல், தொடர்ந்து பயன்படுத்த நினைக்கின்றனர். இதனாலேயே விற்பனையில் தாமதம் ஏற்படுகிறது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Mercedes-Benz-Used-Cars-3

Mercedes-Benz-Used-Cars-3

கடந்த ஆண்டு மெர்சிடிஸ் பென்ஸ் பயன்படுத்திய வாகனங்கள் விற்பனை இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்து, விற்பனையில் வரலாற்று சாதனை படைத்து இருக்கிறது. இதே போன்று இந்த ஆண்டும் பயன்படுத்திய வாகனங்கள் விற்பனை வரலாற்று சாதனை படைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது.

2022 ஆண்டு இந்தியாவில் 15 ஆயிரத்து 822 யூனிட்களை விற்பனை செய்திருந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் 4 ஆயிரத்து 697 யூனிட்களை விற்பனை செய்து 17 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.

google news