automobile
வரப்போகுது Harley Davidson பைக்குகள்..இதன் விலை இவ்வளவா!..அப்படி என்ன இருக்கு இந்த பைக்ல..வாங்க பார்க்கலாம்..
ஹார்ல்லெ-டேவிட்சன் உலக பைக் பிரியர்களின் ஆர்வத்தை தூண்டும் பெயர். அமெரிக்க பைக் உற்பத்தி நிறுவனமான ஹார்ல்லெ-டேவிட்சன் பெரும்பாலும் உயர்ரக க்ரூஸர் பைக்களை மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்து வந்தது. முதல் முறையாக -440 என்கிற 440சிசி பைக்கை அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.
X-440, Royal Enfield Classic 350, ஹண்டர் 350, Truimp-350 ஆகிய பல க்ரூஸர் பைக்களுக்கு போட்டியாக களம் இறக்கப்படுகிறது. X-440 பைக் ஆனது ஹார்ல்லெ-டேவிட்சன் மற்றும் இந்தியாவின் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உருவானது. அதனால் இந்திய சந்தையை கவரும் விதமாகவே அமையும் என்பது பைக் ஆர்வலர்களின் கருத்து.
neo-retro டிசைனில் உருவான இந்த பைக்கின் முன் பக்கத்தில் ஒரு வட்ட வடிவ LED ஹெட் லைட் அதன் நடுவில் ஒரு LED DRL-ம் வழங்கபட்டுள்ளது. அதன் இருபுறமும் வட்டவடிவ இண்டிகேட்டர்கள் பொருத்தபட்டுள்ளது. இந்த பைக்கில் சிறிது தடிமனான பெட்ரோல் டேங் மற்றும் monopad கன்சொல் இந்த பைக்கின் தோற்றத்தை மேலும் அழகுபடுத்துகிறது. மல்டிஃபங்சன் ஸ்விட்ச்களும் சிறப்பாகவும், அழகாகவும் வடிவம் பெற்றுள்ளன.
ஹார்ல்லெ-டேவிட்சன்-னின் குறைந்த விலை பைக்கான X-440, 440சிசி ஏர்/ஆயில் கூல்டு எஞ்ஜினால் சக்திஅளிக்கப்படுகிறது. எஞ்ஜின், Split dual cradle Frame-ல் பிணைக்கப்பட்டுள்ளது. வாயு-ஊட்டபெற்ற, ப்ரிலோடு செய்யபட்ட அட்ஜஸ்டபில் டூயல் ஷாகப்சார்பர்கள் பொருத்தபட்டுள்ளது. 18/17 இன்ச் அலாய் வீலுடன் எம்-ஆர்-எஃப் ஷப்பர் ஹைக் டையர் பொருத்தபட்டுவருகிறது. இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் டூயல்-சேனல் எ பி எஸ் பொருத்தபட்டுள்ளது.
இதில் என்ன ஹைலைட் என்றால் இதுவரை இந்தியாவில் ஹார்ல்லெ-டேவிட்சன் பைக்கின் குறைந்தபட்ச விலையே ரூ, 20லட்சம்(எக்ஸ்-ஸோரூம்) ஆகும் ஆனால் X-440 ரூ2.7லட்சம்(எக்ஸ்-ஸோரூம்)ஆகும்.350சிசி செக்மண்டில் அசைக்கமுடியாத நிலையில் Royal Enfield Classic-350 முன் இந்த ஹார்ல்லெ-டேவிட்சன் X-440 போட்டியை பார்கும் ஆவலில் மக்கள் இருக்கின்றனர்.