automobile
ஜியோவினால் இயங்கும் ஓலா எலெக்ட்ரிக் பைக்குகள்..அப்படி என்ன விசேஷம் இதுல..
இந்தியா மாசு கட்டுப்பாட்டினை கருத்தில் கொண்டு வாகன உற்பத்தியில் பல்வேறு சட்ட திருத்தங்களை கொண்டு வருகிறது. அதில் முக்கியமான ஒன்று எலக்ட்ரிக் வாகன உற்பத்தியை மேம்படுத்துவதுதான். ஏனென்றால் எலக்ட்ரிக் வாகனங்களின் செயல்பாடில் புகை வெளியேற்றம் என்பதே கிடையாது. அதனால் மாசு என்பதற்கும் வழியே இல்லை.
இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனமாக இருந்து மிக விரைவாக உலகத்தர ப்ராண்டாக முன்னேறியுள்ள ஓலா எலக்ட்ரிக்-ன் பைக் நிறுவனம் இன்று அதிகமான எலக்ட்ரிக் பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. கடந்த ஒன்பது மாதங்களாக ஓலா எல்க்ட்ரிக்-ன் விற்பனை என்னிக்கையே முதலிடம் பெற்றுள்ளது. ஓலா எலக்ட்ரிக் உற்பத்தி செய்வது மூன்று மாடல்கள் அவை ஓலா எஸ்1, ஓலா ஏர், மற்றும் ஓல எஸ்1 ப்ரோ ஆகும்.
ஓலா பைக்-ல் 7-இன்ச் DFT Display பொருத்தப்பட்டுள்ளது, இந்த ஸ்கிரீனில் வாகனம் செல்லும் போது அதன் வேகம், ரேஞ்ச், பேட்டரி போன்ற பல விஷயங்கள் தெரியும்.நாம் வழக்கமாக மொபைலில் செல்லும் வழியினை அறிய கூகுல் மேப் பயன்படுத்துவோம் அது டேட்டா கிடைக்கவில்லையென்றால் வேலை செய்யாது.
அதுபோலவே ஓலா பைக்கின் ஸ்கிரீனிலும் நாம் போகும் வழியினை காண்பிக்க மேப் மை இந்தியா(Map My India)-வின் மேப் இருக்கும் இது ஓலா மற்றும் மேப் மை இந்தியா இரு நிறுவனத்திற்குமான கூட்டு ஒப்பந்தமாகும் . மொபைல் கனெக்ட் செய்யாவிட்டாலும் இந்த ஆப் செயல்படும். அனைத்து விவரங்களையும் அறிவிக்கும். ஆனால் இந்த செயலியும் இண்டர்நெட் இல்லாமல் செயல்படாது. அப்போ எவ்வாறு செயல்படுகிறது?.
ஓலா பைக்கில் ஸ்மார்ட் போணை கனெக்ட் செய்யாமலேயே நேவிகேஷன் ஆப் வேலை செய்வதற்கு ஜீயோ உதவி செய்கிறது என்பது பலரும் அறியவேண்டிய உண்மை. ஜியோ, ஓலா இருநிறுவனங்களின் ஒப்பந்தத்தின்படி ஓலா-வின் ஒவ்வொரு பைக்கிலும் ஜியோ சிம் பொருத்தபட்டே வருகிறது. இந்த சிம் முழுமையாக ஓலா வாகனத்தின் கம்யூனிகேஷனுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. வாழ்நாள் முழுவதும் ரீசார்ஜ் செய்ய தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.