Connect with us

job news

ஆஹா…ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு…மாதம் அசத்தலான சம்பளம்…உடனே அப்ளை பண்ணுங்க.!!

Published

on

job vacancy TNSRLM

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் மாவட்ட இயக்க மேலாண்மை , வட்டார இயக்க மேலாண்மை காலியாக உள்ள வட்டார இயக்க மேலாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர்  பணியிடங்களை ஒப்பந்த முறையில் பூர்த்தி செய்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இந்த பதவிக்கு எப்படி விண்ணப்பிக்கவேண்டும் என்ற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர் மற்றும் காலியிடங்கள் 

  • வட்டார இயக்க மேலாளர் – 1 காலியிடங்கள்
  • வட்டார ஒருங்கிணைப்பாளர் – 7 காலியிடங்கள் 

கல்வி தகுதி 

  • வட்டார இயக்க மேலாளர் பதவிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு உடன் கணினி படிப்பில் 6 மாத சான்றிதழ் படிப்பு (MS Office) தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும் (அல்லது) கணினி அறிவியல் அல்லது கணினி பயன்பாடுகளில் பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.
  • வட்டார ஒருங்கிணைப்பாளர்  பதவிக்கு  ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு உடன் கணினி படிப்பில் 3 மாத சான்றிதழ் படிப்பு (MS Office) தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும் (அல்லது) கணினி அறிவியல் அல்லது கணினி பயன்பாடுகளில் பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு 

வட்டார இயக்க மேலாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள் 28 வயதிற்குள் இருக்கவேண்டும். அதுபோலவே, வட்டார ஒருங்கிணைப்பாளர்  பதவிக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்களும் 28 வயதிற்குள் இருக்கவேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சம்பள விவரம் 

  • வட்டார இயக்க மேலாளர் – 15,000
  • வட்டார ஒருங்கிணைப்பாளர் -12,000

விண்ணப்பிக்கும் முறை 

மேற்கண்ட இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய உங்களுக்கு ஆர்வமும் தகுதியும் இருந்தால் இந்த pdf-ல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை முதலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பதிவிறக்கம் செய்துவிட்டு அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தையும் முழுவதுமாக நிரப்பவேண்டும். விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, பணிஅனுபவம் ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் இணை இயக்குநர்/திட்ட உ இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் 5.45 மணி வரை நேரில் சென்று கொடுக்கலாம்.

அல்லது இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், தமிழ்நாடு ஊரக வாழ்வாதர இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி துறை அலுவலக வளாகம்,சிவகங்கை அஞ்சல் 630562, சிவகங்கை மாவட்டம் என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ 11.07.2023 (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்படிவத்தில் உள்ள விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலை தெரிந்துகொள்ள இந்த pdf-ஐ க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *