job news
கோயம்புத்தூர் மாநகராட்சியில் வேலைவாய்ப்பு..! 8, 10ம் வகுப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்..!
கோயம்புத்தூர் மாநகராட்சி, தமிழகத்தின் மேற்குப் பகுதியில் கோயம்புத்தூர் மாநகரத்தை நிர்வகிக்கும் உள்ளாட்சித் துறையின் ஒரு அமைப்பாகும். தென்னிந்தியாவின் சென்னை, ஐதராபாத், பெங்களூருக்கு அடுத்த நான்காவது மிகப்பெரிய மாநகராட்சி கோயம்புத்தூர் ஆகும்.
தற்பொழுது கோயம்புத்தூர் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைகள் துறையின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் Notification அறிவிப்பை படித்துவிட்டு விண்ணப்பக்கலாம்.
காலிப்பணியிடம்:
கோயம்புத்தூர் மாநகராட்சியில் வழக்குத் தொழிலாளி (Case Worker), பாதுகாப்பு பணியாளர் (Security), பல்நோக்கு உதவியாளர் (Multipurpose Helper) என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
விண்ணப்பதாரர் வயது:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிப்பவர் 21 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு Notification-ஐ கிளிக் செய்து என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
விண்ணப்பதாரர் தகுதி:
- சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- 8ம் வகுப்பு தேர்ச்சி (அ) 10ம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி.
- பெண்களுக்கு முதல் முன்னுரிமை அளிக்கப்படும்
விண்ணப்பிக்கும் முறை:
- தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர் coimbatore.nic.in அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
- அங்கு கொடுக்கப்பட்டுள்ள Application Form விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கேட்கப்பட்டுள்ள தகவல்களை சரியாக நிரப்ப வேண்டும்.
- விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர், தேவையான ஆவணங்களுடன் கீழே உள்ள முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பப்பட வேண்டும்.
- விண்ணப்பத்துடன் அசல் சான்றிதழ்களை அனுப்பக்கூடாது.
அனுப்பவேண்டிய முகவரி:
District Social Welfare Officer,
District Collectorate Campus,
Old building, Ground floor,
Coimbatore 641018.
Contact No. 0422-2305156
சம்பள விவரம் மற்றும் கடைசி தேதி:
கோயம்புத்தூர் மாநகராட்சி பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.6,400 முதல் ரூ.15,000 வரை சம்பளமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிப்பவர் ஜூலை 10ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதனைத்தாண்டி விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.