Connect with us

job news

அட்ராசக்க…ரூ.40,000 சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு…சிறப்பு அதிகாரி பணிக்கு உடனே விண்ணப்பீங்க.!!

Published

on

டிஎஸ்டி நிதியுதவியுடன் கடந்த 2011-ஆம் ஆண்டு  அண்ணா பல்கலைக்கழகத்தில் சுகாதாரப் பாதுகாப்பு கருவி மேம்பாட்டுக்கான தேசிய மையம் (NHHID) நிறுவப்பட்டது. இந்த (NHHID) அடிக்கடி, இது வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்புகளை வெளியீட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது சிறப்பு அதிகாரி ( Special Officer) பணிக்கு ஆள் வேண்டும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

காலியிடங்கள் 

இந்த சிறப்பு அதிகாரி ( Special Officer) பணிக்கு ஒரே ஒரு காலியிடம் மட்டுமே இருப்பதால். விண்ணப்பதாரர்கள் கீழே வரும் விவரங்களை படித்துக்கொண்டு விரைவாக விண்ணப்பித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கல்வி தகுதி 

இந்த பணியில் நீங்கள் வேலைக்கு சேரவேண்டும் என்றால், அரசால் அங்கீகரிக்கப்பட்ட  பல்கலைக்கழகத்தில்  UG/PG Degree in Science / Engineering Full Time with MBA (Full Time/ Part Time) ஆகியவற்றில் நீங்கள் தேர்ச்சி பெற்றவராக இருக்கவேண்டும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவையான அனுபவம் 

குறைந்தபட்சம் நிர்வாகம் மற்றும் நிதித்துறையில் 2 வருட அனுபவம் இருந்தே ஆகவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் விவரம் 

இந்த சிறப்பு அதிகாரி ( Special Officer)  பணிக்கு விண்ணப்பம் செய்பவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு சம்பளமாக ரூ.40,000 கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை 

இந்த பணியில் சேர ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து முடித்தவுடன் அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு அதன் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை 

இந்தப் சிறப்பு அதிகாரி ( Special Officer) பணியில் சேர உங்களுக்கு ஆர்வமும் விருப்பமும் இருந்தால் இந்த pdf-ல் கொடுக்கப்பட்டுள்ள   விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொண்டு. அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தையும் சரியாக பூர்த்தி செய்து கடைசி தேதிக்கு முன் கீழ் கண்ட முகவரிக்கு அனுப்பும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

முகவரி 

NATIONAL HUB FOR HEALTHCARE INSTRUMENTATION DEVELOPMENT Anna University, Chennai – 600 025 Kalanjiyam Building, 2nd Floor, Opp. to Mining Engineering, E mail: [email protected]

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *