Connect with us

latest news

லிஸ்ட் பெருசாகிட்டே போகுது..வாட்ஸ் ஆப்பின் அடுத்த வசதி..பழைய போன்ல இருந்து சாட் அனைத்தையும் புது மொபைலுக்கு மாற்றணுமா?..அப்போ இத செய்ங்க..

Published

on

whats app1

சமீப காலமாக மெட்டாவிற்கு சொந்தமான பிரபல வாட்ஸ் ஆப் நிறுவனம் பல அட்டகாசமான வசதிகளை தங்களது ஆப்பில் கொண்டுவந்த வண்ணம் உள்ளது. இதன் மூலம் உபயோகிப்பாளர்களின் பாதுகாப்பை மேலும் மேலும் மேம்படுத்துகிறது. இந்த வரிசையில் தற்போது ஒரு புதிய வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி தற்போது வாட்ஸ் ஆப்பில் நமது பழைய சாட்கள் அனைத்தையுமே நமது புதிய மொபைலின் நாம் சேமித்து கொள்ளலாம். புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் நாம் புதிய மொபைல் வாங்கும் பொழுது நமது பழைய மொபைலில் நமக்கு மிக முக்கியமான தகவல்கள் அனைத்தும் இருந்து அதனை நாம் திரும்ப பெற நினைத்தால் தற்போது இந்த வசதியின் மூலம் நாம் அனைத்து சாட் ஹிஸ்டரியையும் எடுத்து கொள்ளலாம்.

transfer chat history into new mobile

transfer chat history into new mobile

இதனை நாம் QR கோட் மூலமாக பயன்படுத்தலாம். உபயோகிப்பாளர் அவர்களின் பழைய மொபைலின் QR கோடை ஸ்கேன் செய்வதின் மூலம் நாம் நமது பழைய செய்திகள் அனைத்தையும் புதிய மொபைலுக்கு மாற்றி கொள்ளலாம். இதனை நாம் மிகவும் பாதுகாப்பான முறையில் பண்ணலாம் எனவும் மெட்ட தலைவரான மார் சூக்கர்பெர்ஜ் கூறியுள்ளார். இதற்கு நமது இரு மொபைல்களும் ஒரே Wi-Fi-யில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

சாட் மாற்றி கொள்ளும் வழிமுறைகள்:

இதனை நாம் பின்வரும் எளிதான வழிமுறைகள் மூலம் செய்து கொள்ளலாம்.

  1. நமது பழைய மொபைலில் வாட்ஸ் ஆப்பினை திறந்துஅதில் setting>chat>chat transfer என கொடுக்கவும்.
  2. தற்போது அதில் ஒரு QR code நமக்கு தெரியும்.
  3. இந்த QR Code-ஐ நமது புதிய மொபைலில் Scan செய்து நமது செய்திகளை புதிய மொபைலில் பெற்று கொள்ளலாம்.

புதிய மொபைலில் நாம் பண்ண வேண்டியது:

  1. நமது புதிய மொபைலில் வாட்ஸ் ஆப்பினை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
  2. நமது மொபைல் எண்ணை உறுதி செய்து கொள்ளவும்.
  3. இப்போது நமது பழைய மொபைலில் Start on Transfer Chat என்ற பட்டனை அழுத்தவும்.
  4. மொபைலில் அனுமதியை ஏற்று கொண்ட பின் இப்போது நாம் QR Code-ஐ காணலாம்.
  5. இந்த கோடை நாம் பழைய போனின் மூலம் ஸ்கேன் செய்து கொள்ளவும்.
  6. பின் நமது பழைய போனுக்கு வரும் அழைப்பை ஏற்று கொள்ளவும்.
  7. செய்திகள் புதிய மொபைலுக்கு வந்த பின் Done என்ற பட்டனை அழுத்தவும்.

இவ்வாறு செய்யும் போது நமது இரு போன்களும் அன்லாக்கி இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக நமது பழைய போனில் உள்ள வாட்ஸ் ஆப் செய்திகளை புதிய போனுக்கு மாற்றி கொள்ளலாம்.

google news