job news
பட்டம் பெற்றவர்களுக்கு பக்காவான வாய்ப்பு..! கப்புன்னு புடிச்சிக்கோங்க..மிஸ் பண்ணாதீங்க..!
இந்தியாவில் விளையும் ஏலக்காய், மிளகு போன்ற நறுமணப்பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனைப் பணிகளுக்கான தனி அமைப்பாக இந்திய மசாலா வாரியம் (Spices Board of India) இந்திய அரசின் வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் அமைச்சகத்தால் நிறுவப்பட்டுள்ளது.
இந்திய மசாலா வாரியத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படிக்க வேண்டும்.
காலிப்பணியிடங்கள்:
இந்திய மசாலா வாரியத்தில் காலியாக உள்ள ஆலோசகர்கள் (Consultants) பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு 7 பணியிடங்கள் காலியாக உள்ளன.
விண்ணப்பதாரர் வயது:
ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 63 வயதுக்கு கீழ் உள்ளவராக இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.
விண்ணப்பதாரர் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து வணிக நிர்வாகத்தில் முதுகலை பட்டம் அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் www.indianspices.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, Notification அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.
- பின் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து, அதில் கேட்டகப்பட்டிருக்கும் தகவல்களை சரியாக நிரப்ப வேண்டும்.
- அனைத்து தகவல்களையும் பதிவு செய்த பிறகு, விவரங்கள் சரியாகாக உள்ளதா என்பதை ஒரு முறை சரிபார்க்கவும்.
- நிரப்பிட விண்ணப்பத்தை ஒரு உறைக்குள் வைத்து அதில் “ஸ்பைசஸ் போர்டில் ஆலோசகர்கள் (மார்க்கெட்டிங் & ஏற்றுமதி ஊக்குவிப்பு) பதவிக்கான விண்ணப்பம்” என்று எழுதி அஞ்சல் மூலம் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Secretary, Spices Board,
Sugandha Bhavan, N H By Pass,
Palarivattom. P.O. Kochi- 682 025.
தேர்வு முறை மற்றும் சம்பள விவரம்:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்படுவார். இதற்கு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு மாதம் ரூ.40,000 முதல் ரூ.60,000 சம்பளமாக வழங்கப்படும்.
கடைசி தேதி:
ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிப்பவர் ஜூலை 14ம் தேதிகுள் விண்ணப்பிக்க வேண்டும். அதனைத்தாண்டி பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.