automobile
மாஸ் காட்டிய எஸ்.யு.வி. மாடல்கள்.. விற்பனையில் வளர்ச்சி.. மஹிந்திரா அதிரடி!
மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம் தனது பயணிகள் வாகன பிரிவு விற்பனையில் வருடாந்திர அடிப்படையில் 21 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. கடந்த ஜூன் மாதத்தில் மஹிந்திரா நிறுவனம் 21 ஆயிரத்து 588 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இது 2022 ஜூன் மாதத்தில் விற்பனையான 26 ஆயிரத்து 880 யூனிட்களை விட அதிகம் ஆகும்.
வருடாந்திர அடிப்படையில் மஹிந்திரா நிறுவனம் வளர்ச்சியை பதிவு செய்துள்ள நிலையிலும், மாதாந்திர விற்பனையில் 0.90 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது. மே 2023 மாதத்தில் 32 ஆயிரத்து 883 வாகனங்களை விற்பனை செய்த நிலையில், கடந்த மாதத்தில் 32 ஆயிரத்து 588 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது.
அமோக வரவேற்பு :
பயணிகள் வாகன பிரிவில் மஹிந்திரா நிறுவனத்தின் எஸ்யுவி மாடல்களுக்கு அமோகா வரவேற்பு கிடைத்து இருப்பது தெரியவந்துள்ளது. எனினும், கார் மற்றும் வேன்களின் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. ஜூன் 2023 மாதத்தில் ஒட்டுமொத்த விற்பனை 32 ஆயிரத்து 588 யூனிட்களாக இருக்கும் நிலையில், வருடாந்திர அடிப்படையில் விற்பனை 31 சதவீதம் வளர்ச்சி பெற்று இருக்கிறது.
2024 நிதியாண்டில் மஹிந்திரா நிறுவனம் இதுவரை ஒரு லட்சத்து 172 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் மஹிந்திரா நிறுவனம் 76 ஆயிரத்து 310 யூனிட்களையே விற்பனை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. யுடிலிட்டி வாகனங்கள் விற்பனை கடந்த மாதம் 22 சதவீதம் வளர்ச்சி பெற்று 35 ஆயிரத்து 585 யூனிட்களாக உள்ளன.
அசத்தல் வளர்ச்சி :
இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இந்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 620 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பிரிவின் வருடம் துவங்கி குறிப்பிட்ட தேதி வரையிலான அடிப்படையிலும் மஹிந்திரா நிறுவனம் 33 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த நிதியாண்டில் 75 ஆயிரத்து 420 யூனிட்களில் இருந்து தற்போது ஒரு லட்சத்து 162 யூனிட்களாக அதிகரித்துள்ளது.
மந்தமான வேன் விற்பனை :
கார் மற்றும் வேன் மாடல்களின் விற்பனை 90 சதவீதம் சரிவடைந்து ஜூன் 2023 மாதத்தில் வெறும் மூன்று யூனிட்களே விற்பனையாகி இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மஹிந்திரா நிறுவனம் 260 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 2023 நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 890 என்று இருந்தது. தற்போதைய நிதியாண்டில் இந்த எண்ணிக்கை வெறும் பத்து யூனிட்கள் தான் விற்பனையாகி இருக்கிறது.