latest news
ஸ்மார்ட்போன் விலை குறையுமா, குறையாதா? நம்பலாமா நம்ப கூடதா?
சமூக வலைதளத்தில் சமீபத்தில் வைரல் ஆன படத்தில் மொபைல் போன், டிவி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என பல்வேறு எலெக்ட்ரிக் சாதனங்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் இந்தியாவில் ஸ்மார்ட்போன் மற்றும் இதர மின்சாதன பொருட்களின் விலை விரைவில் குறைக்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
மத்திய நிதித்துறை அமைச்சகம் சார்பில் பகிரப்பட்ட ட்வீட்-இல் எலெக்ட்ரிக் மின்சாதனங்கள், ஸ்மார்ட்போன்களுக்கான வரி விவரங்கள் அடங்கிய படம் இடம்பெற்று இருந்தது. இதில் “Relief Through GST on Household Goods” என்ற பிரிவில் இரண்டு அட்டவணைகள் இடம்பெற்றுள்ளன. அதில் ஒன்று ஆறு ஆண்டுகளுக்கு முந்தைய ஜி.எஸ்.டி. வரி விவரங்களும், மற்றொன்றில் இன்றைய ஜி.எஸ்.டி. வரி விவரமும் இடம்பெற்று இருக்கிறது.
இந்த படத்தை வைத்து, ஜூலை 1-ம் தேதியில் இருந்து அரசு மின்சாதனம் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்கப் போவதாக கூறி சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டது. எனினும், இந்த தகவலில் துளியும் உண்மையில்லை. வரி குறைப்பு காரணமாக மொபைல் போன், டிவி, குளிரூட்டி என பல்வேறு பொருட்களின் விலை குறையும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
ஆனால், வைரல் தகவலில் துளியும் உண்மையில்லை. ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு முன் இந்தியாவில் மொபைல் போன்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வரி வசூலிக்கப்பட்டு வந்து. இது 31 சதவீதமாக இருந்தது. தற்போது 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இதே வரி மற்ற மின்சாதனங்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
மொபைல் மற்றும் மின்சாதனங்கள் விலை குறைவதாக வைரலான தகவலை உண்மை என்று பலரும் நம்பிவிட்டனர். பலரும் குறிப்பிட்ட மொபைல் போன்களுக்கான ஜிஎஸ்டி வரி 31 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட இருப்பதாக நம்பினர். பலர் இந்த தகவலை மற்றவர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் பகிர்ந்தனர்.
சிலர் இதுபோன்ற பகிர்வு பதிவுகளில் ஜூலை 1-ம் தேதியில் இருந்து இந்தியாவில் மொபைல் போன் மற்றும் மின்சாதனங்கள் விலை குறைக்கப்படுவதாக தலைப்பிட்டனர். இதன் காரணமாக இந்த தகவல் இணையம் முழுக்க வைரலாக பரவியது. அதன்படி மின்சாதனங்களுக்கு சமீப காலங்களில் 31 சதவீதம் வரி வசூலிக்கப்படவே இல்லை.
தற்போது இவற்றுக்கான வரி 18 சதவீதமாகவே வசூலிக்கப்பட்டு வருகிறது. அரசு இதில் மாற்றம் செய்ய நினைக்கும் வரை இந்த வரி வசூலில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது. அந்த வகையில், இந்தியாவில் மொபைல் போன் உள்பட பல்வேறு மின்சாதனங்களுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்படும் என்ற தகவல், உருமாற்றம் அடைந்த ஒன்று என்பது தெளிவாகி இருக்கிறது.