govt update news
அட கவலைய விடுங்க..இனி இரயில் லேட் ஆகி வந்தாலும் நமது பணத்தினை திரும்ப பெறலாம்..அது எப்படினு தெரிஞ்சிக்கனுமா?..
இந்தியாவில் இரயில்வே துறை மிக முக்கியமான துறைகளில் ஒன்றாகும். இதன் மூலம் நாம் எங்கிருந்து எங்கு வேண்டுமானலும் பயணம் செய்யலாம். ஆனால் சில சமயங்களில் இரயிலானது தாமதமாக வருவதனால் பயணிகள் பல அவதிக்குள்ளாகின்றனர். மேலும் இதன் மூலம் அவர்களுக்கு எந்த வித நன்மைகளும் கிடைப்பதில்லை.
இப்படியான சிக்கலான சமயங்களில் நாம் நமது பணத்தினை திரும்ப பெற சில விதி முறைகள் உள்ளன. அதாவது இரயிலானது 3 மணி நேரம் அல்லது அதற்கும் மேலாக தாமதமாகி வந்தால் பயணிகள் தங்களது டிக்கெட்டுகளை ரத்து செய்ய முடியும். இந்த முறையானது தற்போது Counter டிக்கெட்டுகளுக்கும், ஆன்லைன் டிக்கெட்டுகளுக்கும் பொருந்தும். எனவே நமது டிக்கெட் உறுதியான நிலையில் இரயில் தாமதமாக வந்தால் நாம் சில வழிமுறைகளின் மூலம் நமது பயண கட்டணத்தினை திரும்ப பெற்று கொள்ளலாம்.
எவ்வாறு பயண கட்டணத்தினை திரும்ப பெறுவது?:
- முதலில் IRCTC கணக்கினை ‘லாகின்‘ செய்யவும்.
- பின் ‘Booked Ticket History’ என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
- நாம் TDRஐ பதிவு செய்ய விரும்பினால் PNR என்ற பட்டனை கிளிக் செய்து பின் ‘File TDR‘ என்ற பட்டனை அழுத்தவும்.
- பின் எந்த பயணிக்கு திரும்ப பணம் வர வேண்டுமோ அவர்களின் பெயரை கிளிக் செய்யவும்.
- பின் நாம் எதற்காக Filing TDRஐ செய்கிறோமோ அதற்கான காரணத்தினை கொடுக்க வேண்டும். இதற்கு Others என்ற பெட்டியை உபயோகிக்கவும்.
- இப்போது ‘Submit’ என்ற பட்டனை அழுத்தவும்.
- நாம் ‘Others’ என்ற பட்டனை அழுத்தினால் அதற்கான காரணத்தினை கேட்டு ஒரு பெட்டி உருவாகும். அதில் நமது காரணத்தினை கொடுக்க வேண்டும்.
- பின் நமது தகவல்களை சரி செய்த பின் ‘OK’ என்ற பட்டனை அழுத்த வேண்டும்.
- பின் TDR Entry Confirmation Pageல் நமது PNR எண், Transaction ID, Reference Number, TDR Status மற்றும் நமது காரணம் தெரியும்.