Connect with us

automobile

ஜூன் விற்பனையில் பட்டையை கிளப்பிய கார்கள்..டாப் 5-ல இந்த மாடல்களா..?

Published

on

Car-Sales-June-Featured-Img

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மாருதி சுசுகி நிறுவனம் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வந்தது. விற்பனையில் இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ள நிறுவனங்களை விட அதிகபட்சமாக மூன்று மடங்கு அதிக வாகனங்களை விற்பனை செய்வதில் மாருதி சுசுகி வாடிக்கையாக கொண்டிருக்கிறது.

அந்த வகையில் அதிகம் விற்பனையான கார் மாடல்களை எடுத்துக் கொண்டாலும், டாப் 10 பட்டியலில் பல மாருதி சுசுகி மாடல்கள் கட்டாயம் இடம்பிடித்து விடும். அந்த வகையில், ஜூன் 2023 மாத விற்பனையில் அசத்திய கார் மாடல்களின் டாப் 5 பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

அதிகம் விற்பனையான டாப் 10 கார்கள் மட்டும் ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 770 ஆகும். இதில் மாருதி சுசுகி மட்டும் 79 ஆயிரத்து 900 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இது சந்தை அடிப்படையில் 60.1 சதவீதம் ஆகும். இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாப் 10 கார்கள் மட்டும் 10.34 சதவீதம் வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.

மாருதி சுசுகி வேகன்ஆர் :

Maruti-WagonR

Maruti-WagonR

கடந்த ஜூன் 2023 மாதம் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையான கார் மாடல்களில் மாருதி சுசுகி வேகன்ஆர் முதலிடம் பிடித்துள்ளது. இந்த மாடல் மட்டும் 17 ஆயிரத்து 481 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் மாருதி நிறுவனம் 19 ஆயிரத்து 190 வேகன்ஆர் யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. அந்த வகையில் வருடாந்திர அடிப்படையில் 8.91 சதவீதம் குறைவு ஆகும். சந்தையில் வேகன்ஆர் மாடல் மட்டும் 13.37 சதவீதம் பங்குகளை பெற்று இருக்கிறது.

மாருதி சுசுகி ஸ்விஃப்ட் :

Maruti-Swift

Maruti-Swift

இதைத் தொடர்ந்து மாருதி சுசுகி ஸ்விஃப்ட் மாடல் 15 ஆயிரத்து 955 யூனிட்கள் விற்பனையாகி பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. வேகன்ஆர் போன்றே மாருதி சுசுகி நிறுவனம் 16 ஆயிரத்து 213 ஸ்விஃப்ட் யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இது வருடாந்திர அடிப்படையில் 1.59 சதவீதம் குறைவு ஆகும். இந்த மாடல் மட்டும் சந்தையில் 12.20சதவீதம் பங்குகளை கொண்டிருக்கிறது.

ஹூண்டாய் கிரெட்டா :

Hyundai-Creta

Hyundai-Creta

ஹூண்டாய் கிரெட்டா மாடல் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த மாடலும் வருடாந்திர விற்பனையில் 1.59 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. ஹூண்டாய் கிரெட்டா மாடல் கடந்த மாதம் 14 ஆயிரத்து 447 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இந்த மாடல் அதிகம் விற்பனையாகும் எஸ்யுவி, அதிகம் விற்பனையாகும் காம்பேக்ட் எஸ்யுவி என்ற பெருமையை பெற்று அசத்தி இருக்கிறது.

மாருதி சுசுகி பலேனோ :

Maruti-Baleno 2

Maruti-Baleno 2

இந்த பட்டியலில் மாருதி நிறுவனத்தின் பலேனோ மாடல் நான்காவது இடத்தில் உள்ளது. கடந்த மாதம் இந்த கார் 14 ஆயிரத்து 077 யூனிட்கள் விற்பனையானது. இது அதிகம் விற்பனையான பிரீமியம் ஹேச்பேக் மாடல் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 16 ஆயிரத்து 103 யூனிட்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு விற்பனையில் பலேனோ மாடல் 12.58 சதவீதம் சரிவை பதிவு செய்துள்ளது.

டாடா நெக்சான் :

Tata-Nexon 3

Tata-Nexon 3

இந்திய சந்தையில் அதிகம் விற்பனையான கார் மாடல்கள் பட்டியலில் டாடா நெக்சான் மாடல் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்த மாடல் டாடா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மற்றும் அதிகம் விற்பனையாகும் சப்-4 மீட்டர் எஸ்யுவி என்ற பெருமையை பெற்று இருக்கிறது. கடந்த மாதம் டாடா நெக்சான் மாடல் 13 ஆயிரத்து 827 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. 2022 ஜூன் மாதத்தில் 14 ஆயிரத்து 295 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

google news