Connect with us

latest news

இரண்டு புதிய மொபைல்கள் அறிமுகம்.. மீண்டும் Form-க்கு வந்த நோக்கியா!

Published

on

Nokia-110-2G-and-Nokia-4G-Featured-img

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய நோக்கியா ஃபீச்சர் போன் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இரு மாடல்களும் மிகக் குறைந்த விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றன.

நோக்கியா 110 4ஜி மற்றும் நோக்கியா 110 2ஜி பெயர்களில் இந்த மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இரு மாடல்களிலும் நோக்கியா பாரம்பரியத்தை பரைசாற்றும் வகையில், உறுதியான பில்டு, நீண்ட நேர பேட்டரி பேக்கப் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளன.

இரு மொபைல் போன்களும் எஸ்30 பிளஸ் ஒ.எஸ். கொண்டிருக்கின்றன. இத்துடன் அதிகபட்சம் 1450 எம்ஏஹெச் பேட்டரி, QVGA கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

நோக்கியா 110 4ஜி (2023) அம்சங்கள் :

புதிய நோக்கியா 110 4ஜி 2023 மாடலில் 1.8 இன்ச் QQVGA ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, QVGA பிரைமரி கேமரா, 1450 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளன. கனெக்டிவிட்டியை பொருத்தவரை ப்ளூடூத் 5.0, 3.5mm ஹெட்போன் ஜாக், மைக்ரோ யுஎஸ்பி 2.0, மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் உள்ளன. இந்த மொபைல் போன் எஸ் 30 பிளஸ் ஒ.எஸ். கொண்டிருக்கிறது.

Nokia-110-4G

Nokia-110-4G

இத்துடன் வயர்டு மற்றும் வயர்லெஸ் முறையில் எஃப்.எம். ரேடியோ ஆப்ஷனை செயல்படுத்துகிறது. இந்த மொபைல் 2ஜி, 3ஜி, 4ஜி (நானோ சிம், டூயல் சிம் சப்போர்ட்) நெட்வொர்க் சப்போர்ட் மற்றும் IP52 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி கொண்டுள்ளது.

நோக்கியா 110 2ஜி 2023 அம்சங்கள் :

4ஜி மாடலை விட சற்றே குறைந்த விலையில் கிடைக்கும் நோக்கியா 110 2ஜி 2023 மாடலில் 1.8 இன்ச் QQVGA ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, QVGA பிரைமரி கேமரா மற்றும் சற்றே குறைந்த திறன் கொண்ட 1000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

Nokia-110-2G

Nokia-110-2G

இத்துடன் யு.எஸ்.பி. கனெக்‌ஷன், மைக்ரோ யு.எஸ்.பி., மைக்ரோ எஸ்.டி. சப்போர்ட் மற்றும் முந்தைய மாடலில் உல்ளதை போன்றே எஸ்30 பிளஸ் ஒ.எஸ். உள்ளது. இந்த மாடலிலும், வயர்டு மற்றும் வயர்லெஸ் முறையில் இயங்கும் எஃப்.எம். ரேடியோ வசதி, 2ஜி, நெட்வொர்க் சப்போர்ட் உள்ளது. மேலும் டூயல் சிம் சப்போர்ட், IP52 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி உள்ளது.

விலை விவரங்கள் :

நோக்கியா 110 4ஜி 2023 மாடல் மிட்நைட் புளூ மற்றும் ஆர்க்டிக் பர்பில் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

 

நோக்கியா 110 2ஜி 2023 மாடல் சார்கோல் மற்றும் கிளவுடி புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,699 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

விற்பனையை பொருத்தவரை இரு மாடல்களும் நோக்கியா அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் ரிடெயில் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது.

google news