Connect with us

job news

மத்திய அரசு வேலைக்கு காத்திருப்பவரா நீங்கள்..? இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸில் வேலை..மிஸ் பண்ணாதீங்க..!

Published

on

Indian Telephone Industries Limited

இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Indian Telephone Industries Limited) என்பது இந்தியாவில் உள்ள ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனமாகும். இது இந்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைத்தொடர்புத் துறையின் உரிமையின் கீழ் உள்ளது.

தற்பொழுது, இந்நிறுவனம் காலியாக உள்ள பணியை நிறைப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், Notification அதிகாரபூர்வ அறிவிப்பையும் படித்துவிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள்:

இந்நிறுவனத்தில் உதவி பொறியாளர் / உதவி அதிகாரி பணியில் பல்வேறு இடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் Notification அறிவிப்பை படித்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர் வயது:

விண்ணப்பதாரரின் வயது குறித்து அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பதாரர் தகுதி:

டெக்னிக்கல் இன்ஜினியரிங் : அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/பல்கலைக்கழகத்தில் பொறியியல் / எம்சிஏ அல்லது அதற்கு சமமான படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பைனான்ஸ்  : அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/பல்கலைக்கழகத்தில் இருந்து CA/ICWA/M.Com/ MBA அல்லது PGDM முடித்திருக்க வேண்டும்.

பணியாளர்கள் : MBA/PGDM (02 ஆண்டுகள்) அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/பல்கலைக்கழகத்திலிருந்து வேறு ஏதேனும் சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.

பிற பகுதிகள் : எம்பிஏ அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/பல்கலைக்கழகத்திலிருந்து வேறு ஏதேனும் சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

  • இந்த பணிக்கு சேர ஆர்வமும் தகுதியும் உங்களுக்கு இருந்தால் நீங்கள் அதிகாரப்பூர்வ www.itiltd.in இணையதளத்திற்கு சென்று, Notification அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.
  • அங்கு இருக்கும் ஆன்லைன் Application Form விண்ணப்பப்படிவத்தை சரியாக நிரப்ப வேண்டும்.
  • அனைத்து தகவல்களையும் பதிவு செய்த பிறகு, விவரங்கள் சரியாகாக உள்ளதா என்பதை ஒரு முறை சரிபார்த்துவிட்டு, உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

சம்பள விவரம் மற்றும் கடைசி தேதி:

மேற்கண்ட பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு மாதம் ரூ.6,550 முதல் ரூ.11,350 சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பிப்பவர் ஜூலை 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதனைத்தாண்டி பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *