Connect with us

latest news

டுவிட்டருக்கு Tough கொடுக்கும் திரெட்ஸ் – மார்க்-இன் சம்பவத்தால் ஆடிப் போன எலான் மஸ்க்..!

Published

on

Threads-Featured-img

இன்ஸ்டாகிராம் நிறுவனம் டுவிட்டருக்கு போட்டியாக ‘திரெட்ஸ்’ என்ற பெயரில் புதிய சமூக வலைதள சேவையை துவங்கி இருக்கிறது. தற்போது இந்த சேவை அனைவரும் பயன்படுத்த கிடைக்கிறது. டுவிட்டர் போன்றே இன்ஸ்டாகிராமின் திரெட்ஸ் சேவை டெக்ஸ்ட் சார்ந்த ஆப் ஆகும். இதில் டெக்ஸ்ட் அப்டேட்களை பதிவுகளாக பதிவிட முடியும். எனினும், திரெட்ஸ் சேவையை பயன்படுத்த இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட் வைத்திருப்பது அவசியம் ஆகும்.

Threads-1

Threads-1

புதிய ஆப் டுவிட்டருக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இந்த வலைதளம் சில மிகமுக்கிய மாற்றங்களை பெற்றிருக்கிறது. திரெட்ஸ் என்பது இன்ஸ்டாகிராமின் டுவிட்டர் வெர்ஷன் ஆகும். திரெட்ஸ் சேவை டுவிட்டர் மாதிரியான யு.ஐ. கொண்டு, அதே போன்று செயல்படுகிறது. இந்த தளத்திலும் சென்ட்ரலைஸ்டு ஃபீடில் டெக்ஸ்ட் அப்டேட்களை பதிவிட முடியும்.

Threads-2

Threads-2

ஒட்டுமொத்தத்தில், இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனது செயலியில் உள்ள அம்சங்களை திரெட்ஸ்-இல் வழங்கி இருக்கிறது. அதன்படி இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதை போன்றே, திரெட்ஸ் தளத்திலும் லைக், கமென்ட், ஷேர் உள்ளிட்டவைகளை மேற்கொள்ள முடியும். இந்த தளத்தில் பதிவுகள் அனைத்தும் டெக்ஸ்ட் சார்ந்து இருக்கிறது. இதில் பயனர்கள் தங்களுக்கு அறிமுகமானவர்களை பின்தொடர முடியும்.

Threads-3

Threads-3

பின்தொடர்வோரின் பதிவுகள் பயனருக்கு காண்பிக்கப்படும். மேலும் பதிவுகள் பரிந்துரைக்கப்படும். திரையின் கீழ்புறத்தில் சர்ச், புதிய திரெட் உருவாக்குவது, நோட்டிஃபிகேஷன் மற்றும் ப்ரோஃபைல் உள்ளிட்ட வசதிகளுக்கு தனித்தனி டேப்கள் வழங்கப்பட்டுள்ளன. ப்ரோஃபைல் ஆப்ஷனில் இரண்டு லே-அவுட்கள் இடம்பெற்றுள்ளன. இதில் ஒன்று பயனர் பதிவிடும் திரெட்ஸ்-ஐ பார்ப்பதற்கும், மற்றொன்று பயனர் அளிக்கும் பதில்களுக்கானது ஆகும்.

Threads-4

Threads-4

இன்ஸ்டாகிராமில் உள்ளதை போன்றே திரெட்ஸ் சேவையிலும், ரிஷேர் பட்டன், கோட் டுவீட் பட்டன் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது. இவற்றை திரெட்களில் பயன்படுத்த முடியும். ஆனால் பயனர்கள் புகைப்படம், வீடியோக்கள் மற்றும் இணைய முகவரிகளை திரெட்களில் பதிவிட முடியும். டெஸ்க்ட் பதிவுகளில் அதிகபட்சம் 500 வார்த்தைகளும், வீடியோக்களை அதிகபட்சம் ஐந்து நிமிடங்கள் வரையும் பதிவேற்றம் செய்ய முடியும்.

திரெட்ஸ்-ஐ டவுன்லோடு, பயன்படுத்துவது எப்படி?

– ஆன்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் இன்ஸ்டாகிராம் திரெட்ஸ் சேவை டவுன்லோட் செய்ய கிடைக்கிறது.

– ஆப் ஸ்டோர் அல்லது கூகுள் பிளே ஸ்டோர் சென்று புதிய செயலியை டவுன்லோட் செய்ய முடியும்.

– ஆப் இன்ஸ்டால் செய்த பிறகு, இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட் கொண்டு லாக்-இன் செய்வதற்கான ஆப்ஷன் திரையில் தோன்றும்.

– ப்ரோஃபைலை செட்டப் செய்து, புதிய ப்ரோஃபைல் படம், பயோ மற்றும் லின்க் உள்ளிட்டவைகளை புதிதாக அப்லோடு செய்யவோ அல்லது இன்ஸ்டாகிராமில் உள்ளதை போன்றே செட் செய்து கொள்ளலாம்.

– இதைத் தொடர்ந்து உங்களது திரெட்ஸ் ப்ரோஃபைலை பிரைவேட் அல்லது பப்ளிக் ஆக வைத்துக் கொள்ள ஒரு ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

– இன்ஸ்டாகிராமில் உள்ள அகே அக்கவுன்ட்களை பின்தொடர வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்வதற்கான ஆப்ஷன் திரையில் தோன்றும்.

– இவ்வாறு செய்த பிறகு, திரெட்ஸ் ப்ரோஃபைல் பயன்படுத்த தயாராகி விடும்.

google news