job news
பெண்களே…ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு..அட்டகாசமான சம்பளம் உடனே விண்ணப்பீங்க.!!
மதுரை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஒப்புதலின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தகுதி வாய்ந்த பணியாளர்களை அமர்த்த தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை வேலைக்கு வேண்டும் என அறிவித்துள்ளது. இது குறித்த மற்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள் எண்ணிக்கை
- வழக்கு பணியாளர்-4
- பல்நோக்கு பணியாளர்-2
- பாதுகாவலர் – 2
கல்வி தகுதி
வழக்கு பணியாளர் பதவிக்கு
- சமூகப்பணி அல்லது உளவியல் ஆலோசகர் இயலில் இளங்கலைப்பட்டம் படித்து முடித்தவராக இருத்தல் வேண்டும்.
பல்நோக்கு பணியாளர் பதவிக்கு
- விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அலுவலக அமைப்பில் குறைந்தபட்சம் 1 வருடம் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பாதுகாவலர் பதவிக்கு
- விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அலுவலக அமைப்பில் குறைந்தபட்சம் 1 வருடம் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்
- வழக்கு பணியாளர்-15,000
- பல்நோக்கு பணியாளர்-6,400
- பாதுகாவலர் – 10,000
விண்ணப்பம் செய்யும் முறை
மேற்கண்ட பணியில் வேலைக்கு சேர விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையத்தளம் அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு எண்ணை தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொண்டு அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களையும் முறையாக பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு கடைசி தேதி 21ஆம் தேதிக்கு முன் அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
முகவரி – அலுவலக முகவரி: மாவட்ட சமூகநலஅலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மூன்றாவது தளம், கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தொலைப்பேசி எண். 0452-2580181.