latest news
ஏர்டெலா? ஜியோவா?.. எது ஆஃபர்களை அள்ளி கொடுக்குதுனு பார்க்கலாமா?..
ஆஃபர்களை அள்ளி கொடுப்பதில் ஏர்டெல் மற்றும் ஜியோ இருவரும் போட்டி போட்டு கொண்டு செயல்படுகின்றன. பிரிபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு என இரு திட்டங்களிலும் இவை பல்வேறு சலுகைகளை அளிக்கின்றன. அந்த வகையில் தற்போது 500 ரூபாய்க்கும் குறைவான விலையில் எந்த நிறுவனம் நல்ல போஸ்ட்பெய்டு சலுகைகளை அளிக்கின்றன என பார்ப்போம்.
ஏர்டெல் போஸ்ட்பெயிடு திட்டங்கள்:
ரூ. 399க்கான திட்டங்கள்:
இந்த திட்டமானது மாதத்திற்கு 40ஜிபி டேட்டாவௌயும், அன்லிமிடெட் கால், 100 SMS/DAY, ஏர்டெல் ரிவார்ட்ஸையும் தருகின்றன. ஆனால் இந்த திட்டமானது எந்த OTT சலுகைகளையும் தரவில்லை.
ரூ. 499 க்கானதிட்டங்கள்:
இந்த மாதந்திர திட்டமானது 75ஜிபி டேட்டாவையும் அன்லிமிடெட் கால், 100 SMS/DAY மற்றும் ஏர்டெல் ரிவார்ஸையும் தருகின்றன. மேலும் இந்த திட்டத்தின் கீழ் 6 மாதத்திற்கான அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பையும், 1 வருடத்திற்கான டிஸ்டினி+ ஹாட்ஸ்டார் வசதியையும், விங்க் பிரிமியம் மற்றும் இன்னும் ஏராளமான சலுகைகளையும் தருகிறது. மேலும் கைபேசி பாதுகாப்பு சேவைக்கான 60% செலவையும் ஏற்றுகொள்கிறது. ஆனால் நமது கைப்பேசியானது தண்ணீர் மற்றும் விபத்தினால் செயழிலந்து போனால் மட்டுமே இந்த சலுகை பொருந்தும்.
ஜியோவின் அதிரடி போஸ்ட்பெயிடு திட்டங்கள்:
சரி வாங்க ஜியொவின் திட்டங்களை இப்போ பார்க்கலாம்.
ரூ. 299க்கான திட்டங்கள்:
இந்த மாதாந்திர திட்டத்தின் மூலம் மாதத்திற்கு 30ஜிபி டேட்டாவையும், அன்லிமிடெட் கால்வசதி, 100 SMS/DAY மற்றும் ஜியோவின் அனைத்து செயலிகளுக்கும் தேவையான இலவச சந்தாவையும் தருகிறது. மேலும் நமது மொபைட் 5ஜி மொபைலாக இருந்தால் நாம் இலவச 5ஜி சேவையையும் உபயோகப்படுத்தலாம். ஆனால் இந்த சந்தாவின் மூலம் நாம் வேறு எந்த OTT தளங்களையும் இலவசமான பயன்படுத்த முடியாது.
ரூ. 399க்கான திட்டங்கள்:
இந்த மாதாந்திர திட்டத்தின் மூலம் நாம் மாதத்திற்கு 75 ஜிபி டேட்டாவையும், அன்லிமிடெட் கால்களையும், 100 SMS/DAY மற்றும் குடும்பத்தில் உள்ள 3 நபர்களுக்கு ஒவ்வொருவரின் எண்ணிற்கும் 5ஜிபி இலவச டேட்டாவையும் பெறலாம். ஆனால் குடும்ப நபர்களும் ஜியோ சிம்கார்டு வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.. மேலும் இந்த திட்டத்தின் மூலம் நாம் அனைத்து டேட்டாவையும் சீக்கிரமே காலி செய்து விட்டால் அடுத்து நாம் செலவு செய்யும் ஒவ்வொரு ஜிபி டேட்டாவிற்கும் ரூ. 10 வசூலிக்கப்படும். மேலும் இந்த திட்டத்தின் மூலமும் நாம் ஜியோவின் அனைத்து செயலிகளையும் இலவசமாக பயன்படுத்தலாம்.
இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சலுகைகளையே வழங்குகின்றன.எனவே எந்த திட்டம் உங்களுக்கு ஏற்றதாக உள்ளதோ அதையே தேர்வு செய்து உபயோகிக்கலாம்.