Connect with us

latest news

யாருமே எதிர்பார்க்கல.. ஒன்பிளஸ் Foldable போன் இந்த பெயரில் தான் அறிமுகமாகுது..!

Published

on

OnePlus-featured-Img

ஒன்பிளஸ் நிறுவனம் ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் உருவாக்குவதாக ஏற்கனவே அறிவித்து விட்டது. கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி நடைபெற்ற ஒன்பிளஸ் 11 அறிமுக நிகழ்வில் இது பற்றிய தகவல் வெளியானது. எனினும், இது தொடர்பாக வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், ஒன்பிளஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் தொடர்ச்சியாக இணையத்தில் வெளியாகி வருகிறது.

OnePlus-Fold-

OnePlus-Fold-

இதுவரை வெளியான தகவல்களில் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் V ஃபோல்டு அல்லது ஒன்பிளஸ் V ஃப்ளிப் போன்ற பெயர்களில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், பிரபல டிப்ஸ்டர் மேக்ஸ் ஜம்போர் வெளியிட்ட தகவல்களில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ‘ஒன்பிளஸ் ஒபன்’ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்து இருக்கிறார்.

 

வெளியீட்டு விவரம் :

மேலும் புதிய ஒன்பிளஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 2023 மூன்றாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். அந்த வகையில், புதிய ஒன்பிளஸ் ஒபன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் நியூ யார்க்-இல் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

OnePlus-Fold-Teaser

OnePlus-Fold-Teaser

டிப்ஸ்டர் மேக்ஸ் ஜம்போர் வெளியிட்டு இருக்கும் தகவல்களில், ஒன்பிளஸ் நிறுவனம் மே மாதம் ஒன்பிளஸ் ஒபன் பெயரை பயன்படுத்துவதற்கான காப்புரிமையை பெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர பிரைம், விங், பீக், எட்ஜ் போன்ற பெயர்களை பயன்படுத்தவும் ஒன்பிளஸ் டிரேட்மார்க் செய்து இருப்பதாக அவர் தெரிவித்து உள்ளார்.

 

ஒன்பிளஸ் ஒபன் பெயரிலேயே இந்த மடிக்கக்கூடி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. புதிய ஒன்பிளஸ் ஒபன் ஸ்மார்ட்போன் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z ஃபோல்டு மற்றும் கூகுள் பிக்சல் ஃபோல்டு மாடல்களை போன்ற டிசைன் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

ஒன்பிளஸ் ஒபன் மாடலில் 7.8 இன்ச் மடிக்கக்கூடிய AMOLED டிஸ்ப்ளே, 2K ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 6.3 இன்ச் AMOLED கவர் ஸ்கிரீன் மற்றும் 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படுகிறது. இத்துடன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அட்ரினோ GPU வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. புதிய ஒன்பிளஸ் ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

Oppo-Foldable pic

Oppo-Foldable pic

இந்த மாடலில் அதிகபட்சம் 4800 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் அதிகபட்சமாக 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம். புகைப்படங்களை எடுக்க ஒன்பிளஸ் ஃபோல்டு மாடலில் 48MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் மற்றும் 64MP டெலிபோட்டோ சென்சார், முன்புறம் கவர் ஸ்கிரீனில் 32MP செல்ஃபி கேமராவும், உள்பறத்தில் 20MP சென்சார் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஆக்சிஜன் ஒஎஸ் 13.1 கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

google news