job news
10, 12 முடித்திருந்தாலே போதும்…ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பீங்க.!!
ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு : ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் அடிக்கடி வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது அந்த வகையில் தற்போது,Trade Apprentices பணிக்கு மொத்தமாக பல காலியிடங்கள் உள்ளதாகவும் இதில் சேர விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வரும் விவரங்களை படித்துக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கூறியுள்ளது.
காலியிடங்களின் எண்ணிக்கை
இந்த பணிக்கு மொத்தமாக 184 காலி பணியிடங்கள் கிடப்பதாகவும் இதனை நிரப்பிக் கொள்ள விண்ணப்பதாரர்களுக்கு நிறுவனம் வேண்டுகோளை விடுத்துள்ளது.
வயது வரம்பு
இந்த பணியில் வேலைக்கு சேர உங்களுக்கு விருப்பமும் ஆர்வமும் இருந்தால் மட்டும் போதாது விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 25 வயது வரை உட்பட்டவர் ஆக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் மட்டும்தான் இந்த பணிக்கு நீங்கள் விண்ணப்பம் செய்ய முடியும்.
சம்பளம்
இந்தப் பணியில் வேலைக்கு சேர விண்ணப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் செய்தவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நிறுவனம் விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது . எனவே சம்பள விவரம் குறித்த தகவலை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள தொடர்பினை தொடர்பு கொண்டு நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
கல்வித் தகுதி
இந்த பணியில் சேர ஆர்வம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் கண்டிப்பாக 10அல்லது 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த சான்றிதழ் இருந்தால் மட்டுமே இந்த பணிக்கு நீங்கள் விண்ணப்பம் செய்து கொள்ள முடியும்.
தேர்வு செய்யப்படும் முறை
இந்த பணியில் சேர நீங்கள் விண்ணப்பித்துள்ளீர்கள் என்றால் அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேரில் அழைக்கப்பட்டு அவர்கள் நேர்காணல் மூலம் இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
இந்த பணியில் சேர ஆர்வமும், தகுதியும் உங்களுக்கு இருந்தால் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான இந்த https://www.hindustancopper.com/Home இணையதளத்திற்கு சென்று அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை முறையாக பதிவு செய்து கடைசி தேதி வருகின்ற 5-ஆம் தேதி அதாவது ஆகஸ்ட் 5ஆம் தேதி கடைசி தினம் என்பதால் அதற்கு முன்னதாகவே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் தகவலை தெரிந்து கொள்ள இந்த PDF-ஐ க்ளிக் செய்யுங்கள்.