Connect with us

automobile

புது கார் வாங்க போறீங்களா..! கொஞ்சம் Wait பண்ணுங்க..! அடுத்தடுத்து வரப்போகும் ஐந்து மாடல்கள்..!

Published

on

Upcoming-SUV-Car-Featured-Img

இந்திய சந்தையில் கார் மாடல்கள் விற்பனை கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றன. உலகின் முன்னணி ஆட்டோமொபைல் சந்தைகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்து இருக்கிறது. கார் உற்பத்தியாளர்கள் இந்திய சந்தையில் அறிமுகம் கார் மாடல்கள் அறிமுகம் செய்ய இருக்கின்றனர். இவற்றில் புதிய கார் மற்றும் பேஸ்லிஃப்ட் மாடல்கள் அடங்கும். அந்த வகையில் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய கார் மற்றும் எஸ்.யு.வி.-க்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

கியா செல்டோஸ் பேஸ்லிஃப்ட் :

இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கார் மாடலாக இது இருக்கிறது. இந்திய சந்தையில் கியா நிறுவனம் முதலாவதாக களமிறக்கிய கார், முதல் முறையாக அப்டேட் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும். சமீபத்தில் இந்த கார் காட்சிக்கு வைக்கப்பட்ட நிலையில், இதன் வெளியீடு விரைவில் நடைபெற இருக்கிறது.

Upcoming-SUV-Car-Featured-Img

Upcoming-SUV-Car-Featured-Img

அம்சங்களை பொருத்தவரை இந்த காரின் டாப் என்ட் வேரியண்ட்களில் ADAS சூட், பானரோமிக் சன்ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதில் புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 158 ஹெச்பி பவர், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இது இந்திய சந்தையில் சக்திவாய்ந்த காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலாக இருக்கும் என்று தெரிகிறது.

ஹூண்டாய் எக்ஸ்டர் :

ஹூண்டாய் நிறுவனம் இதுவரை களமிறங்காத பிரிவில், எக்ஸ்டர் மாடலை நிலைநிறுத்துகிறது. இதே பிரிவில் தற்போது டாடா பன்ச் மாடல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாத அடிப்படையில் அதிகம் விற்பனையான கார் மாடல்கள் பட்டியலில் டாடா பன்ச் 8 ஆவது இடம் பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் டாடா பன்ச் மாடல் 11 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகி இருந்தது.

Hyundai-Exter-1

Hyundai-Exter-1

புதிய எக்ஸ்டர் மாடலில் 1.2 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் CNG ஆப்ஷன்களும் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 83 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. CNG ஆப்ஷனில் இந்த யூனிட் 68 ஹெச்பி பவர், 95 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

ஹோண்டா எலிவேட் :

Honda-Elevate-1

Honda-Elevate-1

எஸ்.யு.வி. பிரிவில் மீண்டும் களமிறங்குவதால், ஹோண்டா நிறுவனத்திற்கு மிக முக்கிய வெளியீடாக ஹோண்டா எலிவேட் இருக்கிறது. அப்ரைட் தோற்றம், எஸ்.யு.வி.-க்கு ஏற்ற அளவீடுகள், 220 மில்லிமீட்டர் கிரவுன்ட் க்ளியரன்ஸ் உள்ளிட்டவை எலிவேட் மாடலில் கச்சிதமாக வழங்கப்படுகிறது. இந்த கார் விலை அடிப்படையில், அதிக மாடல்கள் நிறைந்த காம்பேக்ட் எஸ்.யு.வி.-க்கள் பிரிவில் அதிக போட்டியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் :

ஃபிரெஞ்சு நிறுவனமான சிட்ரோயன் காம்பேக்ட் எஸ்.யு.வி. பிரிவில் 7 சீட்டர் மாடலை களமிறக்க முடிவு செய்து இருக்கிறது. இது ஹோண்டா BR-V மாடலை நினைவூட்டுகிறது. எனினும், இதன் விலை ஹோண்டா BR-V போன்று இல்லாமல், சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.

Citroen-C3-Aircross

Citroen-C3-Aircross

இந்த காரில் 1.2 லிட்டர் டர்போ என்ஜின் வழங்கப்படுகிறது. இது 110 பிஎஸ் பவர் மற்றும் 190 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இதன் விலை சந்தையில் ஏற்கனவே விற்பனையாகி வரும் இதர காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல்களை போன்றே நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் GLC :

Mercedes-Benz-GLC

Mercedes-Benz-GLC

மெர்சிடிஸ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் எஸ்.யு.வி. மாடலாக GLC விளங்குகிறது. தற்போது இந்த கார் 2023 ஆண்டுக்கான அப்டேட் பெற இருக்கிறது. விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் GLC ஸ்பை படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. GLC என்பது C-கிளாஸ் மாடலின் எஸ்.யு.வி. வெர்ஷன் என்பதால், இந்த கார் C-கிளாஸ்-இல் உள்ளதை போன்ற போர்டிரெயிட் ஸ்டைல் MBUX சிஸ்டம் வழங்கப்படுகிறது.

google news