Connect with us

latest news

மெட்டாவா?..டிவிட்டரா?..எதில் வசதிகள் அதிகம்னு பார்க்கலாமா?..

Published

on

twitter vs threads

மெட்டாவின் தலைவரான மார்க் சூகர்பெர்க் சில நாட்களுக்கு முன் மைக்ரோபிளாகிங் தளமான Threads என்ற செயலியை அறிமுகப்படுத்தினார். இது வெளிவந்த ஒரு நாளிலையே 100 மில்லியன் வாடிக்கையாளர்களை சம்பாதித்து மிக பெரிய அளவில் பிரபலமானது. இந்த Threads செயலியானது தாய் நிறுவனமான மெட்டாவின் ஒரு வகை செயலியான இன்ஸ்டாகிராம் உழியர்களால் உருவாக்கப்பட்டது. இந்த செயலியானது உலகின் முதல் பணக்காரரான எலன் மாஸ்க்கிற்கு சொந்தமான டிவிட்டரை போன்று உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

threads app

threads app

இதனையடுத்து இது சம்பந்தமாக எலன் மாஸ்க்கிற்கும் மார்க்கிற்கும் இடையே சச்சரவுகளும் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் டிவிட்டரில் உள்ள சில சிறப்பம்சங்கள் மெட்டாவின் Threads செயலியில் இல்லை.

ஹாஷ் டேக்(Hashtag):

Hashtag என்பது டிவிட்டரில் உள்ள சிறந்த வசதிகளின் ஒன்று என்பது நாம் அறிந்ததே. ஆனால் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற செயலிகளில் இந்த வசதி இருந்தாலும் மெட்டாவின் Threads செயலியில் இந்த வசதி இல்லை. இது வரும் காலங்களில் கொண்டுவரப்படலாம்.

வெப் வெர்ஷன்:

டிவிட்டர் செயலியை நாம் எந்த வெப் பிரவுஸரில் வேண்டுமானாலும் நாம் உபயோகப்படுத்தி கொள்ளலாம். ஆனால் Threads செயலி இன்னும் வெப் வெர்ஷனில் வரவில்லை.

போஸ்ட்களை எடிட் செய்வது:

டிவிட்டர் சமீபத்தில் நாம் போஸ்ட் செய்யும் போஸ்ட்களை எடிட் செய்யு வசதியை அறிமுகப்படுத்தியது. இதன்படி நாம் நமது போஸ்ட்களை எடிட் செய்யலாம். ஆனால் மெட்டாவின் Threads செயலியில் இதுவரை இப்படி ஒரு வசதி வரவில்லை. ஆனால் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் போன்றவற்றில் இந்த வசதி உள்ளது குறிப்படத்தக்கது.

நேரடியாக செய்திகளை அனுப்புவது:

Threads செயலியில் நாம் எந்த ஒரு நபருக்கு நேரடியாக செய்திகளை அனுப்ப இயலாது. ஆனால் டிவிட்டரில் நாம் செய்திகளை எந்த ஒரு நபருக்கும் அவருக்கு நேரடியாக செய்திகளை அனுப்பி கொள்ளலாம்.

அல்ட் டெக்ஸ்ட்(alt text):

அல்ட் டெக்ஸ்ட் என்பது நாம் எந்த ஒரு போட்டைவை போஸ்ட் செய்தாலும் அதனை பற்றிய தகவல்களை நாம் டிஸ்கிரிப்ஷனாக தெரியப்படுத்தலாம். ஆனால் இந்த வசதி Threads  செயலியில் இல்லை. டிவிட்டர் இந்த வசதியை கொண்டுள்ளது.

டிரெண்டிங் தலைப்பு:

டிரெண்டிங் வசதி நாம் நாட்டில் எந்த ஒரு நிகழ்வு நல்ல முன்னணியில் உள்ளது என்பதை அறிய பயன்படுவது. இந்த வசதி டிவிட்டரில் இருக்கிறது. ஆனால் Threads செயலியில் இந்த வசதியானது கிடையாது.

விளம்பரங்கள்:

இது Threads செயலியில் ஒரு முக்கியாமான வசதியாகும். இதில் எந்த வித விளம்பரங்களும் வராது. ஆனால் டிவிட்டரில் விளம்பரங்கள் வரும். இது சில சமயங்களில் பார்ப்பவர்களுக்கு சலிப்பு தன்மையை ஏற்படுத்தும்.

No Following Feed:

ட்விட்டரில் நாம் ஃபாலோவ் செய்பவர்களின் போஸ்ட் மற்றும் நமக்கான சில பரிந்துரை போஸ்ட்கள் என இருவகையான போஸ்ட்களை காண் முடியும். ஆனால் Threads செயலியில் நாம் யாரை ஃபாலோவ் செய்கிறோமோ அவர்களின் பதிவை தவிர வேறு எந்த போஸ்ட்களையும் காண இயலாது.

google news