Connect with us

job news

சட்டம் படித்தவர்களுக்கு சரியான வாய்ப்பு..! மாதம் 1.5 லட்சம் வரை சம்பளம்..உடனே விண்ணப்பிங்க..!

Published

on

NHSRCRecruitment

தேசிய சுகாதார அமைப்பு வள மையம் (NHSRC) தேசிய சுகாதார இயக்கத்தின் (NHM) கீழ் ஒரு தன்னாட்சி பதிவு செய்யப்பட்ட சமூகமாக அமைக்கப்பட்டுள்ளது, பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்த மாநிலங்களுக்கு தொழில்நுட்ப உதவி மற்றும் திறன் மேம்பாட்டு ஆதரவை வழங்குகிறது.

இந்த நிறுவனம் அவ்வப்போது வேலைக்கான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் தற்பொழுது காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான Notification அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

தேசிய சுகாதார அமைப்பு வள மையம் மூத்த ஆலோசகர் (Senior Consultant(Legal)- ED Secretariat) பணிக்காக ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பல்வேறு பணிகளை நிரப்புகிறது. இதற்கு விண்ணப்பிப்பவர் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், Notification அறிவிப்பையும் படித்துவிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் வயது:

மூத்த ஆலோசகர் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர் 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த தகவலுக்கு Notification அறிவிப்பை அணுகவும்.

விண்ணப்பதாரர் தகுதி:

  • பல்கலைக்கழகத்தில் இருந்து சட்டத்தில் பட்டதாரி பட்டப்படிப்புக்கான குறைந்தபட்ச தகுதி, தகுதியுடன் தொடர்புடைய குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்காக மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்குச் செல்ல விருப்பம் கொண்டவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

  • மேற்கண்ட தகுதிகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் nhsrcindia.org அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள Notification அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.
  • பிறகு இணையதளத்தில் இருக்கும் Application Form ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும்.
  • பதிவு செய்வதற்கு முன் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தில் தகவல்கள் சரியாக இருக்கிறதா  என்று கவனமாக படிக்கச் வேண்டும்.

சம்பள விவரம் மற்றும் கடைசி தேதி:

மூத்த ஆலோசகர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு மாதம் ரூ.90,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிப்பவர் ஜூலை 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *