latest news
20000க்குள் நல்ல மொபைல் வேணுமா?..இதோ வந்துவிட்டது VIVO Y 78 Plus..
ஆண்டிராய்டு போன்கள் இல்லாத மனிதர்களை பார்ப்பதே அரிதாகிவிட்ட நிலையில் பல நிறுவனங்கள் அடுத்தடுத்து புதுபுது மொபைல்களை சந்தையில் அறிமுகப்படுத்தி கொண்டுதான் வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது பிரபல விவோ நிறுவனம் தங்களின் லேட்டஸ்ட் மாடல் மொபைலான VIVO Y 78 Plus சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மொபைலானது 5ஜி வசதியுடன் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலை:
இந்த மொபைலானது ரூ.19,090க்கு சந்தையில் விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டோரேஜ்:
இந்த மொபைலானது Qualcomm Snapdragon 695 சிப்செட்டையும் ஆக்டோகோர் ப்ராஸசரையும் கொண்டுள்ளது. மேலும் இது 8ஜிபி RAM மற்றும் 128ஜிபி இண்டெர்னல் ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது.
மொபைல் வண்ணங்கள்:
இந்த மொபைலானது Azure, Warm Sun Gold, Moon Shadow என்ற மூன்று வண்ணங்களில் நமக்கு கிடைகின்றது.
OS:
ஆண்டிராய்டு வெர்ஷன் 13
திரை:
இந்த மொபைலானது 6.78இன்ச் AMOLED வகை திரையையும் கொண்டுள்ளதால் நமக்கு ஒரு சிறந்த அனுபவத்தை கொடுக்கும்.
கேமரா:
இதன் பின்புறத்தில் 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமராவையும் கொண்டுள்ளது. மேலும் முன்புறத்தி 8MP செல்ஃபி எடுப்பதற்கு ஏற்றாற்போல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
பேட்டரி:
Vivo Y78 plus மொபைல் 5000mAh பேட்டரி திறனுடனும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளது. இதன் நீடித்து உழைக்கக்கூடிய பேட்டரி அமைப்பினால் நாம் ஒரு முறை சார்ஜ் செய்தால் நீண்ட நேரத்திற்கு நாம் மொபைலை உபயோகித்து கொள்ளலாம்.
இந்த மொபைலை நாம் வாங்கும் பொழுது நமக்கு ஹெட்செட், யூஎஸ்பி கேபிள், யூஎஸ்பி பவர் அடாப்டர், எஜெக்ட் டூல், போன் கேஸ், ப்ரொடெக்டிவ் ஃபிலிம் போன்ற பொருட்களும் நமக்கி கிடைகின்றன.