job news
எந்த பட்டம் பெற்றிருந்தாலும் போதும்..! மத்திய அரசில் புதியதோர் வேலை..மிஸ் பண்ணாதீங்க..!
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனம் இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையத்தின் அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவதற்கு ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பணியை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் BECIL வெளியிட்டுள்ள Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்:
BECIL நிறுவனம் காலியாக உள்ள கள உதவியாளர் (Field Assistant) பணியை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு மொத்தமாக 250 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியுள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர் வயது:
கள உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு Notification-ஐ கிளிக் செய்து என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
விண்ணப்பதாரர் தகுதி:
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் www.becil.com என்ற இணையதளத்தின் மூலம் Application ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் செல்லுபடியாகும் தனிப்பட்ட மின்னஞ்சல் ஐடியை வைத்திருக்க வேண்டும்.
- ஒரு விண்ணப்பதாரரிடம் தனிப்பட்ட மின்னஞ்சல் ஐடி இல்லையென்றால், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் தனது புதிய மின்னஞ்சல் ஐடியை உருவாக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் நிற புகைப்படத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை, கையொப்ப ஸ்கேன் நகலைப் பதிவேற்ற வேண்டும்.
- தங்களது சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்கள் பதிவேற்றப்பட வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவங்களை பதிவு செய்வதற்கு முன் கவனமாக படிக்கச் வேண்டும்.
- பிறகு விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
பொது/ ஓபிசி/ முன்னாள் படைவீரர்/ பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக்கட்டணமாக ரூ.885 செலுத்த வேண்டும். SC/ST/ EWS/ PH விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக்கட்டணமாக ரூ.531 செலுத்த வேண்டும்.
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் திறன் தேர்வு மற்றும் நேர்காணல் குறித்து மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படும். மேலே உள்ள தகுதி அளவுகோல்களின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே திறன் தேர்வு மற்றும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
சம்பள விவரம் மற்றும் கடைசி தேதி:
கள உதவியாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு மாதம் ரூ.22,744 சம்பளமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிப்பவர் ஜூலை 20ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதனைத்தாண்டி விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது