govt update news
ஒரு வழியா வந்துருச்சுப்பா..பெண்களுக்கான ரூ.1000 உதவி தொகையை எவ்வாறு பெறுவதுனு தெரியனுமா?..
தமிழக முதலைமச்சர் தனது தேர்தல் வாக்குமூலத்தில் மாதமாதம் குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் ரூ.1000 உதவித்தொகையாக அளிப்பதாக அறிவித்திருந்தார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை ஜுலை 10ஆம் தேதி வெளியிட்டார். இதன்படி கீழ்காணும் தகுதி உடையவர்கள் மட்டுமே இந்த உதவிதொகையை பெறலாம் எனவும் அறிவித்தார்.
தகுதியானவர்கள்:
- இந்த உதவி தொகையை பெற விரும்புவரின் ஆண்டு வருமானம் ரூ.2.5லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
- வருடத்திற்கு நாம் உபயோகிக்கும் மின்சாரம் 3600 யூனிட்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
- இவர்களின் குடும்ப உறுப்பினர்கள் வருமான வரி செலுத்துபவராக இருத்தல் கூடாது.
- குடும்ப உறுப்பினர்கள் அரசாங்க பணிகளிலோ அல்லது பென்ஷன் வாங்குபவராகவோ அல்லது அரசியல் பிரமுகராகவோ இருத்தல் கூடாது.
- மேலும் குடும்ப தலைவர் பெயரில் நான்கு சக்கர வாகனம் பதிவு செய்திருக்க கூடாது.
- குடும்ப தலைவர் 5 ஏக்கருக்கு மேல் விளை நிலமும் 10 ஏக்கருக்கு மேல் வறண்ட நிலமும் இருத்தல் கூடாது.
குடும்ப தலைவிகளுக்கான வரையறைகள்:
- இந்த உதவி தொகையை குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு மட்டுமே வழங்கப்படும். ஒருவேளை குடும்ப தலைவரின் பெயரில் குடும்ப அட்டை இருந்தாலும் பிரச்சனை இல்லை. அந்த அட்டையில் உள்ள குடும்ப தலைவி இந்த தொகையினை பெற்று கொள்ளலாம்.
- குடும்ப தலைவி இல்லாத நிலையில் அந்த குடும்பத்தில் உள்ள 21 வயதினை கடந்த பெண்ணிற்கு இந்த உதவி தொகை வழங்கப்படும். இந்த வசதி திருநங்கைகளுக்கும் பொருந்தும் எனவும் அறிவித்துள்ளனர்.
முதலமைச்சர் அறிவிப்பின்படி இந்த திட்டமானது வருகின்ற செப்டம்பர் மாதம் 15 நாள் முன்னாள் முதலமைச்சரான சி.என்.அண்ணாதுரை அவர்களின் பிறந்த நாள் அன்று நடைமுறைக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டதின் கீழ் கிட்டதட்ட 1.5 லட்சம் பயனர்கள் விண்ணப்பிப்பார்கள் எனவும் தெரிகின்றது. இதற்கான சிறப்பு முகாம்களை ஆங்காங்கே உள்ள நியாய விலை கடைகளில் நடத்துமாறு மாவட்ட அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ரேஷன் அட்டை இல்லாத எழைகள், பழங்குடியினர், மலைவாழ் மக்கள் போன்றவர்கள் இத்திட்டத்தி சேர அவர்களின் ஆதார் கார்டுகளை வைத்திருத்தல் அவசியம். இதற்கான விண்ணப்பத்தினை பெற கீழ்காணும் லிங்கை கிளிக் செய்யவும்.
https://drive.google.com/file/d/1aYZS89jJ4E-tWxMEKrFEPPLVfAncD3Kp/view?pli=1