latest news
5 நாட்கள்-ல 145 மில்லியன்.. டவுன்லோட்களில் பட்டையை கிளப்பும் திரெட்ஸ்.. மார்க் செம ஹேப்பி!
இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் திரெட்ஸ் ஆப் வெளியானது முதலே அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது. டுவிட்டருக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய திரெட்ஸ் சேவை அறிமுகமானதில் இருந்தே டவுன்லோட்களில் அசத்தி வருகிறது. அதன்படி வெளியான முதல் இரண்டு மணி நேரங்களில் சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் இதனை டவுன்லோடு செய்தனர்.
வெளியாகி ஐந்து நாட்கள் கடந்துவிட்ட நிலையில், திரெட்ஸ் செயலியில் சுமார் 145 மில்லியன் பயனர்கள் சைன்-அப் செய்து உள்ளனர். இந்த எண்ணிக்கையை இன்ஸ்டாகிராமில் பார்க்க முடிகிறது. இதனை செயலியின் ப்ரோஃபைல் பகுதியில் உள்ள ஹாம்பர்கர் ஐகானில் க்ளிக் செய்து பார்த்துக் கொள்ளலாம்.
இவ்வாறு செய்யும் போது திரெட்ஸ் ஆப்ஷன் திரையில் தோன்றும், அதனை க்ளிக் செய்தால் கியூ.ஆர். கோட் டிக்கெட் கிடைக்கும். டிக்கெட்டில் யூசர்நேம் இடம்பெற்று இருக்கிறது. இதில் எத்தனை பேர் செயலியில் சைன்-அப் செய்துள்ளனர் என்ற விவரங்களை பார்க்க முடியும். கடந்த வாரம் அறிமுகமானதில் இருந்தே இந்த செயலி சீரான வளர்ச்சியை பெற்று வருகிறது.
முதல் இரண்டு மணி நேரங்களில் திரெட்ஸ் செயலியை 20 லட்சத்திற்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்தனர் என்று மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்து இருந்தார். பிறகு, ஏழு மணி நேரத்தில் இந்த எண்ணிக்கை பத்து மில்லியனாக அதிகரித்தது. மேலும் முதல் நாளிலேயே சுமார் 50 மில்லியன் பயனர்களை திரெட்ஸ் பெற்றது.
டிரென்டிங் செயலியாக மாறிய திரெட்ஸ், மிக குறுகிய காலக்கட்டத்தில், அதிக பயனர்களை பெற்றது. மெட்டா நிறுவனம் திரெட்ஸ் சேவையை இன்ஸ்டாகிராமுடன் ஒருங்கிணைத்து இருக்கிறது. இதன் காரணமாக திரெட்ஸ் சேவையில் சைன்-இன் செய்வது மிகவும் எளிமையான காரியம் ஆகும். திரெட்ஸ் சேவையிலும் இன்ஸ்டாகிராம் விவரங்களை கொண்டே லாக்-இன் செய்து கொள்ளலாம். மேலும் அதே நபர்களை திரெட்ஸ் சேவையிலும் பின்தொடர முடியும்.
டுவிட்டர் தளத்தில் தொடர் மாற்றங்கள் செய்யப்பட்டு வருவது, பல்வேறு சேவைகளுக்கு புதிதாக கட்டண முறை அமலாக்கப்பட்டு இருப்பது போன்ற காரணங்களால் அதிருப்தியில் இருந்த பயனர்கள் பலர் திரெட்ஸ் சேவையில் இணைந்துள்ளனர். மேலும் இன்ஸ்டாகிராமின் திரெட்ஸ் செயலி எப்படி உள்ளது என்பதை அறிந்து கொள்ளவும், பலர் இதில் சைன் இன் செய்து வருகின்றனர். காரணம் எதுவாயினும், திரெட்ஸ் பயனர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பது தற்போதைக்கு நிற்காது என்றே தெரிகிறது.