Connect with us

latest news

ஏலேய்.. ஆர்டிஸ்ட்-னு காமிச்சிட்ட-லே.. ஃபோல்டபில் மேக்புக் உருவாக்கும் ஆப்பிள்!

Published

on

Apple-Featured-img

ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய OLED டிஸ்ப்ளே கொண்ட லேப்டாப்கள் பிரிவில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிசினஸ் கொரியா வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி, ஆப்பிள் நிறுவனம் தென் கொரியாவை சேர்ந்த டிஸ்ப்ளே உற்பத்தியாளர்களான சாம்சங் டிஸ்ப்ளே மற்றும் எல்ஜி டிஸ்ப்ளே உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Apple-Logo

Apple-Logo

அதன்படி இரு நிறுவனங்களும் ஆப்பிள் நிறுவனத்தின் டாப் எண்ட் மேக்புக் மாடலுக்கு மடிக்கக்கூடிய பேனலை வினியோகம் செய்ய வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மடிக்கக்கூடிய லேப்டாப் மாடல் 2025 ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. மடிக்கக்கூடிய OLED பேனல்களை உருவாக்கவும், உற்பத்தி செய்யவும் கொரிய நிறுவனங்கள் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

Foldable-Pic

Foldable-Pic

மேலும் சாம்சங் நிறுவனம் இதற்காக 3.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சாம்சங் நிறுவனம் இதே OLED பேனல்களை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் மாடல்களிலும் பயன்படுத்தும் என்று தெரிகிறது. எல்ஜி நிறுவனம் இதே பிரிவில் முதலீட்டை அதிகப்படுத்த இருக்கிறது.

Macbook

Macbook

தற்போது எல்ஜி நிறுவனம் டிவி அளவு கொண்ட பேனல்களில் அதிக கவனம் செலுத்துகிறது. லேப்டாப் சாதனங்களுக்கான மடிக்கக்கூடிய OLED டிஸ்ப்ளேக்கள், மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களைவிட, வினியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு அதிக லாபம் ஈட்டிக்கொடுக்கும் என்று தெரிகிறது.

மடிக்கக்கூடிய சாதனங்கள் பிரிவில் அசுஸ் நிறுவனம் மட்டுமே மடிக்கக்கூடிய லேப்டாப்-ஐ இதுவரை அறிமுகம் செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு அசுஸ் ஜென்புக் 17 ஃபோல்டு மாடல் மடிக்கக்கூடிய சாதனங்கள் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டது. அசுஸ் பிரான்டு சீன நிறுவனமான பி.ஒ.இ. உருவாக்கும் மடிக்கக்கூடிய OLED பேனலை பயன்படுத்தி வருகிறது.

Macbook-pro

Macbook-pro

ஆப்பிள் நிறுவனம் OLED ஐபேட் ப்ரோ மாடல்களை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. புதிய மேக்புக் ப்ரோ மாடலின் டிஸ்ப்ளே அடுத்த சில ஆண்டுகளுக்கு அதிகப்படியான மாற்றங்கள் செய்யப்படாது என்றே தெரிகிறது. புதிய சாதனங்களின் விலை வழக்கமான லேப்டாப் மாடல்களை விட அதிக விலை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோன் மாடலை உருவாக்கி வருவதாக நீண்ட காலமாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி ஃபோல்டபில் ஐபோன் மாடல் இந்த ஆண்டே அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டது. எனனும், தற்போதைய தகவல்களில் புதிய மடிக்கக்கூடிய ஐபோன் மமாடல் 2025 ஆண்டு அறிமுகமாகும் என்று தெரிகிறது.

google news