automobile
சின்ன கார், பெத்த லாபம்.. இந்தியாவில் அறிமுகமான ஹூண்டாய் எக்ஸ்டர்!
ஹூண்டாய் நிறுவனம் எக்ஸ்டர், தனது சிறிய மற்றும் குறைந்த விலை எஸ்.யு.வி. மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அறிமுக சலுகையாக புதிய ஹூண்டாய் எக்ஸ்டர் மாடலின் விலை ரூ. 6 லட்சம் பட்ஜெட்டில் துவங்குகிறது. ஹூண்டாய் எக்ஸ்டர் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 10 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
புதிய ஹூண்டாய் எக்ஸ்டர் மாடல் கிரான்ட் i10 நியோஸ் மற்றும் ஆரா மாடல்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பெட்ரோல் மற்றும் CNG ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த கார் EX, S, SX, SX (O) மற்றும் SX (O) கனெக்ட் போன்ற வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் எக்ஸ்டர் மாடலை வாங்க சுமார் 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.
இதில் சுமார் 38 சதவீதம் பேர் AMT வேரியண்ட்களையும், 20 சதவீதம் பேர் ஃபேக்டரி ஃபிட் செய்யப்பட்ட CNG ஆப்ஷனையும் தேர்வு செய்து இருக்கின்றனர்.
டிசைன் :
ஹூண்டாய் எக்ஸ்டர் மாடலின் வெளிப்புறம் பாக்ஸ் போன்ற அப்ரைட் தோற்றம் பெற்று இருக்கிறது. இதன் முகப்பு பகுதியில் ஸ்ப்லிட் ரக ஹெட்லேம்ப் டிசைன், H வடிவ எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், சதுரங்க வடிவத்திற்குள் ஹெட்லைட் கிளஸ்டர்- இதன் கீழ்புறம் ப்ரோஜெக்டர் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. ஃபாக்ஸ் ஸ்கிட் பிலேட் மஸ்குலர் டிசைனில் சேர்க்கப்பட்டு இருக்கிறது.
பக்கவாட்டில் சதுரங்க வடிவத்திற்குள் வீல் ஆர்ச்கள், 15 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், எஸ்.யு.வி. தோற்றத்தை ஏற்படுத்தும் கிளாடிங், கிளாஸ் பிளாக் ORVM-கள், ரூஃப் ரெயில்கள் உள்ளன. காரின் பின்புறம் H வடிவம் கொண்ட எல்.இ.டி. டெயில் லைட்கள், ரியர் வைப்பர், ஷார்க் ஃபின் ஆன்டெனா மற்றும் இன்டகிரேட் செய்யப்பட்ட ஸ்பாயிலர், மவுன்ட் செய்யப்பட்ட பிரேக் லேம்ப்கள் உள்ளன.
இன்டீரியர் :
எக்ஸ்டர் மாடலின் உள்புறம் கிரான்ட் i10 நியோஸ் போன்றே காட்சியளிக்கிறது. இதன் டேஷ்போர்டு i10 நியோஸ்-இல் உள்ளதை போன்ற வடிவம் கொண்டிருக்கிறது. எனினும், இதன் நிறம் மாற்றப்பட்டு இருக்கிறது. முற்றிலும் புதிய ஹூண்டாய் எக்ஸ்டர் மாடலில் ஆல்-பிளாக் இன்டீரியர், டூயல் டோன் கேபின், பின்புறத்திற்கும் ஏ.சி. வென்ட் மற்றும் கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டு உள்ளன.
தொழில்நுட்பம் மற்றும் அம்சங்கள் :
அம்சங்களை பொருத்தவரை புதிய காரின் டேஷ்போர்டில் 8 இன்ச் அளவில் டச் ஸ்கிரீன் வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பில்ட்-இன் நேவிகேஷன், 12 மொழிகளில் யு.ஐ., ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எலெக்ட்ரிக் சன்ரூஃப், வாய்ஸ் கண்ட்ரோல், டேஷ் கேம் மற்றும் டூயல் கேமராக்கள், ஆம்பியன்ட் நேச்சர் சவுன்ட்கள், வயர்லெஸ் போன் சார்ஜர், பேடில் ஷிஃப்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.
பவர்டிரெயின் ஆப்ஷன்கள் :
ஹூண்டாய் எக்ஸ்டர் மாடலில் 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட கப்பா பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 82 ஹெச்பி பவர், 114 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 68 ஹெச்பி பவர், 95 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. புதிய எக்ஸ்டர் மாடல் ஏழு வேரியண்ட்கள் மற்றும் ஒன்பது வித நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
பாதுகாப்பு அம்சங்கள் :
பாதுகாப்பிற்கு எக்ஸ்டர் மாடலில் ஆறு ஏர்பேக், ஏ.பி.எஸ்., இ.பி.டி. உள்ளிட்டவை ஸ்டான்டர்டு அம்சங்களாக வழங்கப்படுகின்றன. பேஸ் மாடலில் மட்டுமே எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், வெஹிகில் ஸ்டேபிலிட்டி மேனேஜ்மென்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், கண்ட்ரோல், 3 பாயின்ட் சீட் பெல்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்படவில்லை. இதன் டாப் எண்ட் மாடல்களில் சைல்டு சீட் ஆங்கர் மற்றும் ஸ்மார்ட் கீ வழங்கப்படுகிறது.