Connect with us

latest news

டாடி மம்மி வீட்டில் இல்ல..அப்போ எடுங்க ASUS ROG ally கேமிங் கன்சோல்..அசத்தலா அறிமுகமாகியிருக்குது..

Published

on

asus rog ally gaming console

பிரபல கணிப்பொறி நிறுவனமான ASUS தற்போது அந்நிறுவனத்தின் முதல் படைப்பான ASUS ROG ally என்ற கேமிங் கன்சோலை அறிமுகம் செய்துள்ளது. இந்த கன்சோலானது விண்டோஸ் 11- ல் இயங்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

priced at rs.69990

priced at rs.69990

விலை:

இதன் விலை இந்திய சந்தையில் ரூ.69,990 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Memory:

ASUS ROG ally கன்சோலானது இரு கட்டமைப்பு வசதிகளில் நமக்கு கிடைக்கின்றது.

  • AMD Z1 Processor with 12GB+256GB
  • AMD Z1 Extreme Processor with 16GB+512GB

தற்போது இந்தியாவில் AMD Z1 Extreme வகையானது ரூ.69,990க்கு Flipkart-ல் கிடைக்கின்றது. மேலும் இதனை அசுஸ் இ-ஷாப், அசுஸ் எக்ஸ்கிளூசிவ் ஸ்டோர்களிலும் பெற்று கொள்ளலாம். இதன் விற்பனை இன்று முதல் ஆரம்பமாகிறது.

ஜுலை 12 முதல் ஜுலை 15 வரை முதலில் வரும் 200 நபர்களுக்கு அசுஸின் ரூ.2000 மதிப்புள்ள மேல் உறையானது வெறும் ரூ.1க்கு விற்பனை செய்யப்படுகிறது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

திரை:

ASUS ROG ally gamin console

ASUS ROG ally gamin console

SUS ROG ally கன்சோலானது 7இன்ச் IPS LCD FHD திரையுடன் நமக்கு கிடைகின்றது. மேலும் இதன் திரையானது கொரில்லா கண்ணாடியுடன் சேர்ந்தே நமக்கு கிடைகின்றது. இதன் எடை 608 கிராம்.

மேலும் இதில் டச் வசதியுடன் கூடிய 2 அனலாக் Thump Stick, D-Pad, A B X Y Button, வலது மற்றும் இடது ஹால் எஃபெக்ட் ட்ரிக்கர் மற்றும் பம்பர், பின்புறம் இரண்டு கிரிப் பட்டன் போன்ற அம்சங்களும் உள்ளன.

பேட்டரி:

ASUS ROG ally  40Wh பேட்டரி அமைப்புடனும் 65 வாட் சார்ஜிங் வசதியுடனும் நமக்கு கிடைகின்றது. மேலும் இதில் Wi-fi மற்றும் bluetooth வசதிகளும் உள்ளன. எனவே நீங்கள் ஒரு கேமிங் பிரியராக இருந்தால் இதனை வாங்கி கொள்ளலாம்.

google news