Connect with us

Finance

வட போச்சே..இருந்தாலும் ஆக்ஸிஸ் வங்கி இப்படி பண்ணிருக்க கூடாது..

Published

on

axis bank flipkart credit card

இந்தியாவின் பிரபல தனியார் வங்கிகளில் ஒன்றுதான் ஆக்ஸிஸ் வங்கி. இந்த வங்கியானது இந்தியாவில் பல இடங்களில் தங்களின் கிளைகளை வைத்துள்ளது. ஒவ்வொரு வங்கியும் தனக்கென்று பலவகை கிரெடிட் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கு வருவது இயல்பே. அதிலும் ஒவ்வொரு கார்டிற்கும் ஒவ்வொரு சலுகைகளை வழங்குவதும் நடைமுறையில் உள்ளதுதான். இவ்வாறு ஆக்ஸிஸ் வங்கியும் தங்களது வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் தங்களது கிரெடிட் கார்டுகளின் மீது பல சலுகைகளை வழங்கியது.

தற்போது இந்த வங்கியானது தங்களது 5 கிரெடிட் கார்டு வகைகளை மதிப்பிழக்க செய்துள்ளது. இந்த செய்தி கிரெடிட் கார்டு உபயோகிப்பாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஆக்ஸிஸ் வங்கியின் கிரெட்டி கார்டில் Magnus வகை கிரெடிட் கார்டை மதிப்பிழக்க வைத்துள்ளதா என்பது இது வரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

மதிப்பிழப்பு என்றால் என்ன?:

மதிப்பிழப்பு என்பது ஒவ்வோரு வங்கியும் அவர்களின் கிரெடிட் கார்டுகளின் மேல் வழங்கும் சலுகைகளை நீக்குவது அல்லது குறைப்பது. இதுதான் மதிப்பிழப்பாகும்.

எந்தெந்த கார்டுகளின் மேல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?:

இந்த மதிப்பிழப்பு நடவடிக்கையானது வரும் ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி முதம் 14 ஆம் தேதிக்குள் நடைமுறைக்கு கொண்டுவரப்படலாம். இந்த வங்கி இவர்களின் Axis Bank Privilage, Axis Bank Reserve, Axis Bank Select, Axis Bank Flipkart, Axis Bank My Zone Credit Cards போன்ற 5 வகை கிரெடிட் கார்டிகளின் மேல் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது. உதாரணமாக வாடிக்கையாளர்கள் ஆக்ஸிஸ் வங்கியின் Axis Bank Flipkart கிரெடிட் கார்டினை உபயோகித்து பொருட்களை வாங்கும் பொழுது அவர்களுக்கு அதன் மீதான சலுகைகளை குறைக்க இயலும் அல்லது சலுகைகளை இல்லாமல் கூட செய்யலாம்.

இந்த தகவலானது ஆக்ஸிஸ் வங்கியில் திருத்தப்பட்ட கிரெடிட் கார்டு மீதான விதிமுறைகள் மற்றும் நிபந்தனகளின் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட செய்தியாகும்.

new rule on Axis bank flipkart credit card

new rule on Axis bank flipkart credit card

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *