Connect with us

latest news

ரூ. 2 ஆயிரம் பன்னிக்கலாம்.. பயனர்களுக்கு ஸ்வீட் சர்பிரைஸ் கொடுத்த சாம்சங்..!

Published

on

Samsung-Galaxy-M33-5G-Featured-Img

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி M34 ஸமார்ட்போனினை சமீபத்தில் தான் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டதும், கேலக்ஸி M33 5ஜி மாடலுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சாம்சங் கேலக்ஸி M33 5ஜி மாடல், கடந்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்திய சந்தையில் கேலக்ஸி M33 5ஜி ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் வேரியண்டின் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.

Samsung-Galaxy-M33-5G

Samsung-Galaxy-M33-5G

புதிய விலை மற்றும் சலுகை விவரங்கள் :

சாம்சங் கேலக்ஸி M33 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் வேரியன்ட் ரூ. 20 ஆயிரத்து 499 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த வேரியண்டின் விலை ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் சாம்சங் கேலக்ஸி M33 5ஜி ஸ்மார்ட்போன் விலை ரூ. 18 ஆயிரத்து 499 என்று மாறி இருக்கிறது.

Samsung-Galaxy-M33-5G-2

Samsung-Galaxy-M33-5G-2

வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனினை டீப் ஓசன் புளூ, மிஸ்டிக் கிரீன் மற்றும் எமரால்டு பிரவுன் என மூன்றுவித நிறங்களில் வாங்கிட முடியும். இத்துடன் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் சாம்சங் ஷாப் ஆப்-இல் வாங்கும் போது ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

சாம்சங் ஆக்சிஸ் வஙஅகி கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் மாத தவணை முறையில் வாங்கும் போது 10 சதவீதம் கூடுதல் கேஷ்பேக் பெற முடியும். பயனர்கள் வட்டியில்லா மாத தவணை முறை சலுகையின் கீழ் மாதம் ரூ. 3 ஆயிரத்து 078 செலுத்தி சாம்சங் கேலக்ஸி M33 5ஜி மாடலை வாங்கிட முடியும்.

Samsung-Galaxy-M33-5G-1

Samsung-Galaxy-M33-5G-1

சாம்சங் கேலக்ஸி M33 5ஜி அம்சங்கள் :

அம்சங்களை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி M33 5ஜி மாடலில் 6.6 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, ஆக்டா கோர் எக்சைனோஸ் 1280 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல்களில் கிடைக்கிறது.

இத்துடன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த சாம்சங் ஒன் யுஐ 3.1, 50MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிலாஷ், 5MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 2MP டெப்த் சென்சார், 2MP மேக்ரோ கேமரா, 20MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் உள்ளது.

google news