Connect with us

Cricket

நான் வேற மாதிரி.. சூர்யாவோட என்னை ஒப்பிடாதீங்க.. பாகிஸ்தான் இளம் வீரர் கருத்து!

Published

on

Suryakumar-Yadav-Mohammad-Harris

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் எதிர்கால நட்சத்திரமாக மாறுவார் என்று எதிர்பார்க்கப்படும் வளர்ந்து வரும் வீரர் தான் முகமது ஹாரிஸ். சர்வதேச கிரிக்கெட்டின் தனது முதல் போட்டியில் தேசிய அணிக்காக சோபிக்கவில்லை என்ற போதிலும், தனது அதிரடியான ஆட்டம் காரணமாக தனித்து விளங்குகிறார்.

தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் ஏ.சி.சி. எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடருக்காக பாகிஸ்தான் அணியில் விளையாடி வருகிறார் முகமுது ஹாரிஸ். இந்த தொடரில் பாகிஸ்தான் விளையாடி இருக்கும் இரண்டு போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற்று இருக்கிறது. வித்தியாசமான ஷாட்களை அடித்து வருவதால், ஹாரிஸ் பல சமயங்களில் சூரியகுமார் யாதவ் உடன் ஒப்பிடப்படுகிறார்.

Suryakumar-Yadav1

Suryakumar-Yadav

இந்த நிலையில், இந்திய அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக, இளம் பாகிஸ்தான் வீரர் தான் ஒப்பிடப்படுவது பற்றி கருத்து தெரிவித்து இருக்கிறார்.

“இப்போதே எங்கள் இருவரையும் வைத்து ஒப்பீடு செய்யக்கூடாது, சூரியாவுக்கு 32-33 வயதாகிவிட்டது, நான் இன்னமும் 22 வயதான சிறுவன். அந்த இடத்தை அடைவதற்கு நான், இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும்.”

“சூரியா தனக்கென ஒரு இடத்திலும், ஏ.பி. டி வில்லியர்ஸ் தனது சொந்த அளவிலும், நான் எனது சொந்த அளவில் இருக்கிறேன். நான் எனக்கென 360 டிகிரி கிரிக்கெட்டர் என்ற பெயரை எடுக்க விரும்புகிறேன், அவர்களின் பெயரை பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை,”

Ab-de-Villiers1

Ab-de-Villiers

“எங்களுக்கு மற்ற அணிகள் ஒரே மாதிரியான ஒன்று தான். நாங்கள் இந்த தொடரில் விளையாடவே இங்கு வந்திருக்கிறோம், நாங்கள் இந்தியாவை எதிர்த்து விளையாடுவதற்கு மட்டும் வரவில்லை. நாங்கள் மற்ற அணிகளுக்கு எதிராக விளையாடியதை போன்றே, இந்தியாவுக்கு எதிராகவும் விளையாடுவோம்,” என்று முகமது ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

Mohammad-Harris1

Mohammad-Harris1

இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள், விளையாடிய முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. அந்த வகையில், வெள்ளி கிழமை நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணி குழுவில் முன்னணி இடத்திற்கு முன்னேறி, கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பை அதிகப்படுத்திக் கொள்ளும்.

google news