latest news
போடு..அடுத்து வெளியாகபோகுது புது மாடல் டேப்லெட்..Honor Pad X9…
ஹானர் பேடு X9(Honor Pad X9) டேப்லட்(Tablet) உலகசந்தையில் விற்பனைக்கு வந்துவிட்டது ஆனாலும் தற்போது இந்திய சந்தையினுள் நுழைய தயாறாகிவிட்டது. இ-வணிக ஜாம்பவான் அமேசான் நிறுவனம் இந்தியாவில் இந்த டேப்லட்-ன் அறிமுகத்தை பற்றி வெளியிட்டுள்ளது. ஹானர்-ன் இந்திய வெப்சைட்டிலும் ஹானர் பேடு X9(Honor Pad X9) டேப்லட் இடம்பெற்றுள்ளது. ஆனால் எப்போது விற்பனைக்கு வரும் என்று கூறபடவில்லை.
ஸ்டோராஜ்:
இந்த டேப்லட் 4GB RAM+128GB storage-உடன் கிடைக்கவிருக்கிறது. எக்ஸ்பாண்டபில் RAM டெக்னாலஜி இந்த டேப்லட் -ல் உள்ளது. அதனால் உபயோகிக்கப்படாத சேமிப்பு பகுதிகளை பயன்படுத்தி மேலும் 3GB virtual RAM-ஆக பயன்படுத்திகொள்ளலாம்.
பேட்டரி மற்றும் வண்ணம்:
ஹானர் பேடு X9, ஆண்ட்ராய்டு 13 ஐ சார்ந்த மேஜிக் OS 7.1-னினால் இயங்குகிறது. ஹானர் பேடு X9 டேப்லட்(Tablet) – ல் 7250 mAh பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. இந்த டேப்லட் Space Gray Colour -ல் மட்டுமே இந்தியாவில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.
திரை:
1.5இன்ச் தொடுதிரை 2K (1200×2000 pixels) IPS HD LCD display , 120Hz refresh rate-உடன் ஹானர் பேடு X9 டேப்லட்(Tablet) – ல் இடம்பெற்றுள்ளது. இந்த டேப்லட் -ன் ஸ்க்ரீன்-பாடி விகிதம்(screen to body ratio) 86% மற்றும் 100% RGB colour gamut கொண்டுள்ளது. இந்த டேப்லட் -ல் Snapdragon 685 4G SoC இடம்பெற்றுள்ளது.
கேமரா:
இதன் பின்புற்த்தில் 5 MP rear camera இடம்பெற்றுள்ளது அதேபோல் முன்பகுதியிலும் 5 MP front camera இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 6 speaker-களுடன் இந்த டேப்லட் உள்ளது.
இதர வசதிகள்:
இந்த டேப்லட் -ல் இணைப்பிற்காக WI-Fi 5, Bluetooth 5.1 connectivity மற்றும் USB Type-c Port போன்ற வசதிகளும் உள்ளன. இந்த டேப்லட் -ன் அளவு 267.3×167.4×6.9 mm மற்றும் 499 g எடை கொண்டதாகும். ஹானர் பேடு X9(Honor Pad X9) டேப்லட்(Tablet), இந்தியாவில் அமேசான் நிறுவனத்தினால் விற்பனை செய்யப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.