Cricket
ஜாகீர் கான் – இஷாந்த் ஷர்மா டெஸ்ட் ரெக்கார்டுகள்.. அது எப்படி திமிங்கலம் ஒரே மாதிரி இருக்கும்?
முன்னாள் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்கள் ஜாகீர் கான் மற்றும் இஷாந்த் ஷர்மா இருவரும் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களாக இருந்தவர்கள் ஆவர். அனைத்து விதமான போட்டிகளிலும் சிறந்து விளங்கிய வீரர்களாக அறியப்படும் ஜாகீர் கான் மற்றும் இஷாந்த் ஷர்மா அணிக்கு தேவையான காலக்கட்டத்தில் விக்கெட் வீழ்த்த எப்போதும் தவறியது இல்லை.
பந்துவீச்சில் இருவருக்கும் எவ்வளவு ஒற்றுமை இருந்ததோ, ஆனால் இவர்களின் டெஸ்ட் சாதனைகள் அச்சு அசலாக ஒரே மாதிரி இருப்பது தெரியவந்துள்ளது. இந்தியா மற்றும் வெஸ்ட் இன்டீஸ் அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின் போது, இஷாந்த் ஷர்மா மற்றும் ஜாகீர் கான் ஆகியோர் ஜியோசினிமாவில் கமென்ட்ரி செய்தனர்.
கமென்ட்ரியின் நடுவில், இஷாந்த் ஷர்மா மற்றும் ஜாகீர் கான் ஆகியோரின் டெஸ்ட் கிரிக்கெட் புள்ளி விவரங்கள் காண்பிக்கப்பட்டது. அதிசயிக்கும் வகையில், இருவரும் 311 விக்கெட்கள், உள்நாட்டில் 104-ம், வெளிநாட்டு மைதானங்களில் 207 விக்கெட்களையும் வீழ்த்தி உள்ளனர்.
இதோடு ஜாகீர் கான் மற்றும் இஷாந்த் ஷர்மா இருவரும் 11 முறை ஐந்து விக்கெட்களையும், ஒரு முறை பத்து விக்கெட்களையும் வீழ்த்தி இருக்கின்றனர். இதை பார்த்ததும், ஜாகீர் கான் மற்றும் இஷாந்த் ஷர்மா இந்த விஷயம் எங்களுக்கே இப்போது தான் தெரியும் என்று தெரிவித்தனர்.
2011 உலக கோப்பை வென்ற கையோடு ஜாகீர் கான் 2015 ஆம் ஆண்டு இந்திய அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவர் 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராஃபி தொடரிலும் விளையாடினார். இஷாந்த் ஷர்மாவும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்த நிலையில், கடந்த 2023 ஐ.பி.எல். தொடரில் மீண்டும் களமிறங்கினார்.
டிரினிடாட்-இல் நடைபெற்ற இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு 365 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இன்டீஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 76 ரன்களை எடுத்திருந்தது. ஐந்தாவது நாள் ஆட்டம் மழை காரணமாக நடைபெறவில்லை. இதனால் போட்டி டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் வெஸ்ட் இன்டீஸ் அணிகள் இடையே மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் நடைபெற இருக்கின்றன.