Cricket
அவர்தான் பெஸ்ட்டு பவுலர்! இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரை புகழ்ந்து தள்ளிய ரோஹித்.!
வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது மழை குறுக்கிட்டதால், போட்டி ட்ராவில் முடிந்தது. மழை குறுக்கிட்ட காரணத்தால் இந்திய அணி வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது. இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்ற நிலையில், நேற்றய இரண்டாவது போட்டியில் மழை குறுக்கிட்ட காரணத்தால் போட்டி டிராவில் முடிந்தது.
இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முகமது சிராஜ் மொத்தமாக 5 விக்கெட் எடுத்திருந்தார் அவரைப் பற்றி இந்தியனின் கேப்டன் ரோஹித் ஷார்மா பாராட்டி போட்டி முடிந்த பிறகு பேசி உள்ளார். இது குறித்து பேசிய அவர் ” முகமது சிராஜ் இந்த போட்டியில் அருமையாக விளையாடினார். அவருடைய பந்து வீச்சு மிகவும் அருமையாக இருந்தது. அவர் வீசும் பந்து எதிரணியை திணற வைத்தது.
குறிப்பாக அவர் வீசிய ஒவ்வொரு பந்தும் பேட்ஸ்மேன்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. அப்படித்தான் பந்து வீச வேண்டும் அவருடைய பந்துவீச்சு என்னை இந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெகுவாக ஈர்த்தது. அவர் பந்து வீசும் போது தான் ஒரு கேப்டன் என நினைத்து பந்து வீசுகிறார். அப்படி தான் எல்லா பந்துவீச்சாளர்களும் இருக்க வேண்டும்” என ரோஹித் ஷர்மா கூறியுள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய ரோஹித் ஷர்மா இஷான் கிஷனின் ஆட்டமும் இந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பார்ப்பதற்கு அருமையாக இருந்தது அவர் அடித்த ஷாட்கள் அனைத்துமே நன்றாக இருந்தது. அவருடைய அரை சதம் நம்மளுடைய இந்திய அணிக்கு தேவைப்பட்ட து. அதனால் தான் அவரை முன்னதாகவே இறக்க காரணம் . அவரும் அதனைபொறுப்பெடுத்துக்கொண்டு மிகவும் அருமையாக விளையாடி அரை சதம் விளாசினார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார்.