Cricket
உழைப்பை கொடுத்தோம்! மொத்தமா வீணா போச்சு..வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் வேதனை.!
வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1-0 என்ற அடிப்படையில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டி கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது. நேற்று கடைசி நாள் ஆட்டத்தின் போது மழை குறுக்கிட்டதால், போட்டி ட்ராவில் முடிந்தது. மழை குறுக்கிட்ட காரணத்தால் இந்திய அணி வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்ற அடிப்படையில் வென்றது.
இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கிரேக் பிராத்வைட் “நாங்கள் எங்களால் முடிந்தவரை நன்றாக பந்த வீசவும் பேட்டிங் செய்யவும் எங்களுடைய முழு உழைப்பை கொடுத்திருக்கிறோம் . இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நாங்கள் வெற்றி பெறும் வாய்ப்பு எங்களுக்கு இருந்தது. அது எனக்கே தெரிந்தது, ஆனால், இறுதியாக மழை வந்து அனைத்தையும் கெடுத்து விட்டுப் போய்விட்டது.
அதனேசி மற்றும் கிரிக் மெக்கன்சி ஆகியோருடைய ஆட்டம் என்னை வெகுவாக ஈர்த்தது. அவர்களுடைய ஆட்டத்தை பார்ப்பதற்கே மிகவும் நன்றாக இருந்தது. அவர்கள் நல்ல ரன்களை அடித்த காரணத்தால் தான் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த நிலைமைக்காவது வந்தது. அவர்களைப்போல வீரர்கள் இந்திய அணியில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. முதல் இன்னிங்ஸில் நாங்கள் விறுவிறுவன ஐந்து விக்கட்களை விட்டு விட்டோம்.
ஆனாலும் எங்களுடைய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் கிட்டத்தட்ட 100 ஓவருக்கு மேல் தாக்குப்பிடித்து நின்றது மிகப்பெரிய ஒரு விஷயம் அதனை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த போட்டியில் மழை வரவில்லை என்றால் நாங்கள் வெற்றி பெற்றிருக்கலாம் என நான் நினைக்கிறேன். இந்த போட்டியில் கொடுத்த கடின உழைப்பையும் முயற்சியும் அடுத்தடுத்ததாக வரும் தொடர்களில் நாங்கள் கண்டிப்பாக கொடுக்கும் என உறுதி அளிக்கிறேன் எனவும்” கிரேக் பிராத்வைட் கூறியுள்ளார்.