Connect with us

Cricket

அவர் தொடர்ச்சியாக டி20 கிரிக்கெட் தொடரில் இடம் பெறவேண்டும்! கட்டளை போட்ட கெளதம் கம்பீர் .!

Published

on

gautam gambhir

டி20 கிரிக்கெட் தொடர்களில் சமீப காலமாக பெரிய பெரிய சீனியர் கிரிக்கெட் வீரர்கள் விளையாடாமல் இருக்கும் நிலையில் இளம் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் இந்திய அணி சார்பாக விளையாட வருகிறார்கள்.  அந்த வகையில் இந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற உள்ள  டி20 கிரிக்கெட் தொடரில் திலக் வர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளிட்ட சில இளைஞர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆனால், ரிங்கு சிங் அணியில் இடம் பெறாதது பலருக்கும் ஏமாற்றத்தை கொடுத்தது. ஆனால், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ரிங்கு சிங் தேர்வாகியுள்ளார். இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் இது குறித்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த கௌதம் கம்பீர் ரிங்கு சிங் அணியில் தேர்வு செய்தது எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை.

ஆனால் ஒரே ஒரு ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் மட்டும் நன்றாக விளையாடியதன் மூலம் அவரை அணியில் தேர்வு செய்திருப்பது தவறான முடிவு என எனக்கு தோன்றுகிறது . அவரை உள்ளூர் போட்டிகளிலும் விளையாட வைத்து அதிலும் சிறப்பாக செயல்பட்ட பிறகு ஐபிஎல் போட்டிகளிலும் அவர்கள் ஒழுங்காக விளையாடினால் அவரை இந்திய அணியில் தேர்வு செய்து வைத்துக் கொள்ளலாம்.

அவருக்கு பதிலாக டி20 தொடரில் எஸ் எஸ் வி ஜெய்ஸ்வாலை தேர்வு செய்வது மிகவும் சரியான தேர்வு என நான் நினைக்கிறேன் ஏனென்றால், ஜெய்ஸ்வால் ஐபிஎல் போட்டிகளிலும் சரி நடந்து முடிந்த டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் சரி அட்டகாசமான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடைய ஆட்டத்தில் ஒரு மேஜிக் இருக்கிறது. அந்த மேஜிக் அணியின் வெற்றிக்கு வழிவகுக்கும்.

Gautam Gambhir Hits Back at Critics Who Questioned His IPL Stint, Tweets  Fiery Video - News18

ஒரு போட்டியில் 170 ரன்களுக்கு மேலும் அவர் எடுத்திருந்தார். எனவே, அதனை வைத்து பார்த்தால் எனக்கு தெரிந்து இந்திய அணியில் ஜெய்ஸ்வால்  தொடர்ச்சியாக டி20 தொடரில் சேர்க்கப்படலாம் என நான் நினைக்கிறேன். இந்த முறை அவரை தேர்வு செய்தது போல டி 20 2024-ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை தொடரிலும் அவர் இடம்பெற வேண்டும் எனவும்” கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *