Cricket
இதெல்லாம் தேவையா கோபி? வித்தியாசமா ரன் அவுட் எடுக்க நினைத்து, இதுதான் மிச்சம்..
சர்வதேச கிரிக்கெட் அல்லது முன்னணி பிரான்சைஸ் நடத்தும் போட்டிகள் என்று கிரிக்கெட்டில் ஓவர்-த்ரோ முயற்சிகள் மிகவும் சாதாரன விஷயம் தான். ஆனால் ஐரோப்பிய கிரிக்கெட் லீக் தொடரில் இது வேற லெவலுக்கு சென்றுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற இ.சி.எஸ். செக்கியா டி10 தொடரில் யுனைடட் கிரிக்கெட் கிளப் மற்றும் பரேக் டைகர் அணிகள் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் யுனைடட் கிரிக்கெட் கிளப் அணி கடைசி ஓவரின் இரண்டு பந்துகளில் மூன்று ரன்களை அடுக்க வேண்டியிருந்தது. யுனைடட் அணிக்காக ஆயுஷ் ஷர்மா மற்றும் அபிமன்யு சிங் ஆகியோர் களத்தில் இருந்தனர். சிங்கில் எடுக்கும் முன்ப்புடன் ஆடிய இந்த ஜோடி, பந்து பேட்டில் படாத நிலையிலும் ஓடினர்.
சிங்கில் எடுக்கும் முயற்சியை தடுக்கும் முனைப்பில், அவர்களை அவுட் செய்வதற்காக டைகர்ஸ் அணி கீப்பர் பந்தை ஸ்டெம்ப் பக்கமாக செலுத்தும் வகையில், காலாலேயே உதைத்தார். கால்பந்து ஷாட் அடித்த நிலையில், பந்து ஸ்டெம்ப்களை அடிக்காமல், பின்புறமாக நின்று கொண்டிருந்த ஃபீல்டர் கையில் சென்றடைந்தது.
இங்கு தான் இந்த போட்டி காமெடி களத்திற்கு திரும்பியது. பரபரப்பான கட்டத்தில் பந்தை எடுத்த ஃபீல்டர் அதனை த்ரோ அடித்தார். ஆனால் அது ஸ்டெம்ப் அருகில் இருந்து ஃபீல்டரிடம் செல்லாமல், சற்று தூரமாக இருந்த மற்றொரு ஃபீல்டரிடம் சென்றடைந்தது. அவர் அங்கிருந்து த்ரோ அடிக்க, அப்போதும் பந்து ஸ்டெம்ப் அருகில் இருந்த ஃபீல்டரை கடந்து, அதிவேகமாக பவுன்டரியை கடந்தது.
போட்டியை பொருத்தவரை யுனைடட் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. டைகர்ஸ் அணியின் அமின் ஹூசைன் 20 ரன்களும், சோஜிப் மியா 30 ரன்களையும் விளாச அந்த அணி பத்து ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 109 ரன்களை எடுத்தது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய யுனைடட் அணி எட்டு விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் பியுஷ்சிங் பாகெல் 23 பந்துகளில் 42 ரன்களை எடுத்தார்.