Cricket
மாயம் இல்ல மந்திரம் இல்ல! விக்கெட் எடுக்க உதவிய வீரர்…வியக்க வைக்கும் வீடியோ.!
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் 5-வது டெஸ்ட் போட்டியில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்துள்ளது. குறிப்பாக ஸ்மித் ரன்அவுட் ஆன சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து தற்போது அனைவரையும் வியக்க வைக்கும் ஒரு ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிராட் செய்தது விக்கெட்எடுக்க பெரும் உதவியாக அமைந்தது. அவர் செய்தது மிகவும் நகைச்சுவையை ஏற்படுதினாலும் இறுதியில் அனைவரையும் வியக்க வைத்தது. ஆஸ்திரேலிய அணியின் இன்னிங்ஸின் போது நட்சத்திர பேட்ஸ்மேன் லாபுஷாக்னே. பேட்டிங் செய்தபோது, ஸ்டம்ப்பில் இருந்த பெயில்ஸை இடம் மாற்றி வைத்தார்.
Even when he’s not bowling, Stuart Broad makes things happen! ????#Ashes2023 pic.twitter.com/VlUI8CZMWs
— Wisden (@WisdenCricket) July 28, 2023
பிறகு அனைவரும் நகைச்சுவையாக சிரித்தனர். லாபுஷாக்னேவும் சற்று காமெடியாக சிரித்துக்கொண்டே இருந்தார். மற்ற வீரர்களும் இது என்ன புதுசா இருக்கு படத்தில் வரும் நகைச்சுவையாக பார்த்துக்கொண்டு இருந்தார்கள். அதன் பிறகு தான் அனைவரும் வியக்க வைக்கும் சம்பவமே நடந்தது. ஏனென்றால், பிராட் ஸ்டம்ப்பில் இருந்த பெயில்ஸை இடம் மாற்றி அடுத்த பந்திலேயே லாபுஷாக்னே அவுட்டானார்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இதனை பார்த்த பலரும் இது என்ன புது மாயாஜாலமாக இருக்கு..? என கூறி வருகிறார்கள். மேலும் ஆஸ்திரேலியா அணியின் இன்னிங்ஸின் போது பேட்டிங் செய்து கொண்டிருந்த ஸ்டிவ் ஸ்மித் 78வது ஓவரில், கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தை அருமையாக ஒரு ஷாட் அடித்து 2 ரன்கள் ஓடினார். பின் இது ரன் அவுட் தீர்ப்புக்காக 3-ஆம் நடுவருக்கு சென்றது ஆனால் அவுட் கொடுக்கவில்லை. இது அவுட் தான் என பலரும் கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.