Connect with us

Cricket

ப்பா செம பவுலிங்! வேகப்பந்து வீச்சாளரை பாராட்டிய கேப்டன் ரோஹித் ஷர்மா.!

Published

on

இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் 3 ஒரு நாள் 5 டி20 கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் கடைசியாக ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிந்த நிலையில், அந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற வகையில் முன்னிலை வகிக்கிறது.

இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் குமார் அருமையாக பந்த வீசி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தார். இந்த நிலையில் போட்டி முடிந்த பிறகு பேசிய கேப்டன் ரோஹித் ஷர்மா முகேஷ் குமாரை பாராட்டி பேசினார். போட்டி முடிந்த பிறகு பேசிய ரோஹித் ஷர்மா ” முகேஷ் குமார் மிகவும் அருமையாக பந்து வீசினார் அவருடைய பந்துவீச்சை பார்ப்பதற்கு இதுவரை இல்லாத அளவில் வித்தியாசமாக இருந்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் இன்னும் அருமையாக பந்து வீசுவார் என நான் நம்புகிறேன். அவர் அதிகமாக ஒருநாள் கிரிக்கெட் போட்டி விளையாடி நான் பார்த்ததில்லை. ஆனால், முதல் ஒருநாள் போட்டியிலே அவர் அருமையாக பதிவு செய்ய ஒரு விக்கெட் எடுத்தார். வருகின்ற போட்டியிலும் அவர் நன்றாக விளையாடுவார் என நான் நம்புகிறேன்.

அவர் வீசும் ஒவ்வொரு பந்துகளும் வித்தியாச வித்தியாசமாக இருந்தது. அவர் வீசும் பந்துகளை நான் பார்த்து கொண்டுதான் இருந்தேன் அவருடைய பந்துவீச்சு என்னை மிகவும் கவர்ந்து விட்டது அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ” என கூறியுள்ளார்.மேலும், முகேஷ் குமார் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூலம் அறிமுகமானார்.

அவர் அந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த நிலையில், அடுத்ததாக ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் இன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2-வது ஒரு நாள் போட்டி நடைபெறவுள்ளது. எனவே, இன்று  நடைபெறும் போட்டியில் அவர் எத்தனை  விக்கெட் வீழ்த்தி அசத்தப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

google news