Connect with us

Cricket

ஐயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர்.. பும் பும் தலைமையில் களமிறங்கும் இந்தியா..!

Published

on

Jasprit-Bumrah-ireland-team-Featured-Img

ஐயர்லாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. அந்த வகையில், காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வில் இருந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் அணியில் இடம்பெற்று இருக்கிறார்.

மேலும் ஐயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஜஸ்பிரித் பும்ரா ஏற்று இருக்கிறார். காயம் காரணமாக அணியில் இருந்து விலகிய நிலையில், ஜஸ்பிரித் பும்ரா கிட்டத்தட்ட ஒரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு களத்தில் இறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ind-Team

Ind-Team

காயம் காரணமாக 2022 டி20 உலக கோப்பை, ஆசிய கோப்பை 2022, ஐ.பி.எல். 2023 என பல்வேறு கிரிக்கெட் தொடர்களில் ஜஸ்பிரித் பும்ரா களமிறங்கவில்லை. தற்போது முழு உடல்நலனுடன் அணியின் கேப்டனாக களமிறங்குவதோடு, ஐயர்லாந்து அணிக்கு எதிராக ஜஸ்பிரித் பும்ரா எப்படி பந்துவீச போகிறார் என்பதை பார்க்க அவரின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து உலக கோப்பை ஒருநாள் தொடர் நடைபெற இருப்பதை அடுத்து, ஜஸ்பிரித் பும்ரா ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. ஐயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்,

 

ஐயர்லாந்து அணிக்கு எதிரான இந்திய அணியில் பல்வேறு இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அந்த வகையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், திலக் வர்மா, அர்தீப் சிங், பிரசித் கிருஷ்னா உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். காயம் காரணமாக விலகி இருந்த பிரசித் கிருஷ்னா மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார்.

Jadeja-Ind-Team

Jadeja-Ind-Team

முன்னதாக பெங்களூருவில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் மும்பை அணி பேட்டர்களுக்கு ஜஸ்பிரித் பும்ரா மற்றும் பிரசித் கிருஷ்னா ஆகியோர் பந்துவீசினர். தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டதை தொடர்ந்து, இருவரும் முழு உடற்தகுதியுடன் மீண்டும் அணிக்கு திரும்பி இருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஐயர்லாந்து தொடருக்கான இந்திய அணி வீரர்கள் விவரம் :

ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷிவம் தூபே, வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்னா, அர்தீப் சிங், முகேஷ் குமார், ஆவேஷ் கான்.

google news