Connect with us

Cricket

1975-ல் அவன் இடத்திலேயே போய் அவனை செஞ்சது!.. வெஸ்ட் இண்டீஸ் தரமான சம்பவம்!..

Published

on

team wi

கிரிக்கெட் உலகை பொருத்தவரையில் 1975 ஆம் ஆண்டு வரை உலக நாடுகள் அனைத்து டெஸ்ட் கிரிக்கெட்டையே மையமாக கொண்டு விளையாடி வந்தனர். அச்சமயத்தில் ஆசிஷ் தொடருக்காக இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருந்தது. போட்டி நடைபெறும் நாள் அன்று விடாது பெய்த மழையின் காரணமாக ஆஷிஷ் தொடர் பாதிக்கப்பட்டது. போட்டி நடைபெறாமல் தடைபட்டதால் ரசிகர்களும் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதை கவனித்த ஐசிசி நிர்வாகம் ஒரு நாள் மட்டும் நடக்கும் போட்டியை ஏற்பாடு செய்தது.

clive lloyd

clive lloyd

பின்னாளில் அதுவே ஒன் டே இன்டர்நேஷனல் என அழைக்கப்படும் ஒருநாள் தொடர் ஆட்டமாக மாறியது. பின்னர் இந்த விளையாட்டும் உலகெங்கும் நடைபெற தொடங்கியது. ஒரு நாள் போட்டி தொடங்கிய சில ஆண்டுகளுக்குள் பல நாடுகளில் கிரிக்கெட் பிரபலமாகிவிட்டது. இதனால் 1975 ஆம் ஆண்டு ஒரு நாள் தொடரின் மிகச்சிறந்த அணி எது என்று திருமாணிப்பதற்காக அனைத்து நாட்டு அணிகளும் பங்குபெறும் விதமாக சர்வதேச ஒரு நாள் போட்டியை நடத்த தீர்மானித்தார்கள். மேலும் அன்றைய காலகட்டத்தில் டெஸ்ட் தொடர்களை நடத்துவதை விட ஒரு நாள் போட்டி நடத்துவதற்கு அதிகம் செலவாகாது.

இருப்பினும் அனைத்து நாட்டு அணிகளையும் வரவழைத்து அனைத்து வீரர்களையும் தங்க வைத்து, பாதுகாத்து அணிகள் விளையாடுவதற்கான விளையாட்டு மைதானத்தை ஏற்பாடு செய்வது போன்றவை எல்லாம் சாதாரண விஷயம் இல்லை. இந்த முக்கிய பொறுப்பு அனைத்தையும் இங்கிலாந்து கிரிக்கெட் அமைப்பு ஏற்றுக் கொண்டது. போட்டியை நடத்துவதற்கு நிதி தேவைப்பட்டதால் ப்ருடன்ஷியல் என்ற நிதி சேவை அமைப்பு இதற்கான முழு பொறுப்பையும் ஏற்க முன் வந்தது. ஆதலால் ப்ருடன்ஷியல் உலக கோப்பை என்று பெயர் சூட்டப்பட்டது. இதற்காக மொத்தம் எட்டு அணிகள் மோதின.

clive lloyed 2

clive lloyed 2

அவைகள் ஆஸ்திரேலியா,இங்கிலாந்து,நியூசிலாந்து,மேற்கிந்தியத்தீவுகள்,இந்தியா,பாகிஸ்தான் போன்றவைகள் தான் முக்கிய அணிகளாக இருந்தன. மேலும் இதைத் தவிர இலங்கை மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவை டம்மி அணிகளாக ஆட்டத்திற்கு சேர்க்கப்பட்டன. 1975 ஆம் ஆண்டு ஜூன் முதல் வாரத்தில் ப்ரூடன்ஷியல் உலக கோப்பை இங்கிலாந்தின் லண்டன் மாநகரத்தில் அமைந்துள்ள லார்ட்ஸ் மைதானத்தில் முதல் போட்டி நடைபெற்றது. இதில் தொடக்கத்திலேயே இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. அப்போது இருந்த இந்திய அணி ஒருநாள் போட்டியில் போதிய அனுபவம் இன்மை காரணமாக போட்டியை தோற்றது.

அடுத்தடுத்த போட்டிகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் அரையிறுதி இறுதிப்போட்டியில் ஒரு பிரிவில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவும் மோதின. மற்றொரு பிரிவில் நியூசிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் என்ற இரு அணியும் மோதினர். இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவும் மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதிக்கொண்டன. முதலில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் குவித்தனர்.

team wi world cup winning 2

team wi world cup winning 2

அதிகபட்சமாக அணியின் கேப்டன் க்ளைவ் லாயிட் 85 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் விளாசி102 ரன்களை எடுத்து இருந்தார். அன்றைய காலகட்டத்தில் இன்று இருப்பது போல் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய அளவில் பாதுகாப்பு இருக்காது. பவுலர்கள் இன்று வீசுவதை விட அன்று மிகவும் வேகமாக வீசுவார்கள் அதை எல்லாம் சமாளித்து ஹெல்மெட் அணியாமல் வீரர்கள் தங்களுடைய ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்.

அதுவே அவரின் முதல் மற்றும் கடைசி சதமாக அமைந்தது. அதனை தொடர்ந்து களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணி மேற்கிந்திய தீவுகளின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 274 ரன்களை மட்டுமே எடுத்து. இதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்று மேற்கிந்திய தீவுகள் அணி முதல் முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது.

google news