Connect with us

Cricket

டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல் எட்டிய இந்திய அணி.. என்ன விஷயம் தெரியுமா?

Published

on

Ind-Team-Featured-Img

சர்வதேச கிரிக்கெட்டில் 200 டி20 போட்டிகளில் விளையாடிய இரண்டாவது அணி என்ற பெருமையை இந்திய கிரிக்கெட் அணி பெற்று இருக்கிறது. நேற்று வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் டி20 போட்டியில் களமிறங்கிய இந்திய அணி இத்தகைய சாதனையை படைத்தது. பாகிஸ்தான் அணி இதுவரை 223 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறது. அந்த வகையில் உலகளவில் அதிக டி20 போட்டிகளில் விளையாடி இருக்கும் முதல் அணி என்ற பெருமையை பாகிஸ்தான் அணி பெற்று இருக்கிறது.

ஹர்திக் பான்டியா தலைமையிலான இந்திய அணி முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இன்டீஸ் அணியை எதிர்கொண்டது. அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இன்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்கள் இழப்புக்கு 149 ரன்களை குவித்தது. வெஸ்ட் இன்டீஸ் தரப்பில் துவக்க வீரரான பிரான்டன் கிங் 19 பந்துகளில் 28 ரன்களை விளாசினார். இதில் நான்கு பவுன்டரிகள், ஒரு சிக்சர் அடங்கும்.

இவரை தொடர்ந்து களமிறங்கிய கைல் மேயர்ஸ், ஜான்சன் சார்லஸ் முறையே ஒன்று மற்றும் மூன்று ரன்களில் தங்களின் விக்கெட்களை இழந்தனர். இவர்களை அடுத்து வந்த நிக்கோலஸ் பூரான் 34 பந்துகளில் 41 ரன்களை விளாசினார். இதில் இரண்டு பவுன்டரிகளும், இரண்டு சிக்சர்களும் அடங்கும்.

Ind-vs-WI-1

Ind-vs-WI-1

ஹர்திக் பான்டிய பந்துவீச்சில் அவுட் ஆன நிக்கோல் பூரானை தொடர்ந்து கேப்டன் ரோவ்மேன் பொவெல் களமிறங்கினார். இவர் தன் பங்கிற்கு 32 பந்துகளில் மூன்று பவுன்டரிகள், மூன்று சிக்சர்களுடன் மொத்தம் 48 ரன்களை விளாசி தனது விக்கெட்டை இழந்தார்.

இந்திய சார்பில் யுஸ்வேந்திர சாஹல் மூன்று ஓவர்களில் 24 ரன்களை கொடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். அர்தீப் சிங் தன் பங்கிற்கு 2 விக்கெட்களை கைப்பற்றினார். கேப்டன் ஹர்திக் பான்டியா மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 150 என்ற எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துவக்கமே சரியாக அமையவில்லை.

துவக்க வீரர்களான இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில் முறையே ஆறு மற்று்ம மூன்று ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 21 ரன்களையும், திலக் வர்மா 22 பந்துகளில் 39 ரன்களையும் எடுத்து ஆவுட் ஆகினர்.

Ind-vs-WI

Ind-vs-WI

கேப்டன் ஹர்திக் பான்டியா 19 ரன்களையும், சஞ்சு சாம்சன் 12 ரன்கள், அக்சர் பட்டேல் 12 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்களை இழந்த இந்திய அணி 145 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் வெஸ்ட் இன்டீஸ் அணி முதல் டி20 போட்டியில் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது.

google news